loader
மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டும்! மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் திட்டத்திற்கு வெ.50 ஆயிரம் வழங்குவதாக டத்தோஸ்ரீ சரவணன் உறுதி!

மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டும்! மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் திட்டத்திற்கு வெ.50 ஆயிரம் வழங்குவதாக டத்தோஸ்ரீ சரவணன் உறுதி!

கோலாலம்பூர், ஏப்.19-
நாட்டில் இந்திய சமுயல்தாயத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் முக்கிய பங்காற்றிய மலேசிய தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் வரலாறு எழுதப்பட வேண்டுமென மஇகாவின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

அன்றைய காலக்கட்டத்தில் நம் சமுயாத்தில் தமிழ் இளைஞர் மணிமன்றம், மஇகா, மலேசிய திராவிடர் கழகம் ஆகியவை முக்கிய பங்காற்றியவை. இளைஞர் மணிமன்றத்தில் இணைந்து சேவையாற்றிய மூத்த சேவையாளர்கள் கௌரவிக்கப்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

இன்று மஇகா நேதாஜி மண்டத்தில் கூட்டரசுப் பிரதேச முன்னாள் மலேசிய இளைஞர் மணிமன்ற பேரவையின் ஏற்பாட்டில் மன்றத்தின் மூத்த சேவையாளர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கான உதவிநிதி வழங்கப்பட வேண்டும் என பேரவையின் தலைவரும் ஏற்பாட்டுக் குழு தலைவருமான கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, அந்த திட்டத்தை முன்னெடுக்குமாறு அதற்கு முதல் கட்டமாக வெ.50 ஆயிரத்தை வழங்குவதாகும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இன்று நடந்த இந்த விழாவில் மணிமன்றத்தின் மூத்த சேவையாளர்கள் 14 பேருக்கு சிறப்பு செய்யப்பட்டது.

0 Comments

leave a reply

Recent News