loader
KLSICCI தேர்தல்: தலைவர் பதவிக்கு நிவாஷ் ராகவன் மற்றும் விகேகே ராஜசேகரன் நேரடி போட்டி!

KLSICCI தேர்தல்: தலைவர் பதவிக்கு நிவாஷ் ராகவன் மற்றும் விகேகே ராஜசேகரன் நேரடி போட்டி!

கோலாலம்பூர், ஏப்.18-

கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக சம்மேளனத்தின் தேர்தலில் அனைத்து பதவிகளுக்கும் இம்முறை கடுமையான போட்டி  நிலவுகிறது.

தலைவர் பதவிக்கு நிவாஷ் ராகவன் மற்றும் விகேகே ராஜசேகரன் நேரடியாக போட்டியிடுவதாக  தேர்தல் குழு இன்று அறிவித்தது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு குமரகுரு போட்டியிடும் வேளையில், ராஜசேகரன் அணி சார்பில் பிரபாகரன் போட்டியிடுகிறார்.

உதவித் தலைவர் பதவிக்கு நிவாஸ் அணி சார்பில் டத்தோ சந்திரசேகரனும் ராஜசேகரன் அணி சார்பில் பன்னீர் செல்வமும் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு நிவாஸ் ராகவன் அணி சார்பில் டத்தின் மகேஸ்வரியும் ராஜசேகரன் அணி சார்பில் செல்வராஜும் போட்டியிடுகிறார்கள்.

சங்கத்தின் 14 உச்சமன்ற பதவிகளுக்கும் இரு அணிகள் சார்பில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிவாஸ் ராகவன் அணி சார்பில் ராம்குமார், குணராஜ், சண்முக செல்வி, மோகனா சின்னத்தம்பி, முகமட் ராபி, எம்.பி.இராமன், பிரபாகரன் கோவிந்தன்,செல்வராசு ஹரிகிருஷ்ணன், கவிவாணன் சுப்பிரமணியம், கவிமாறன், நாகராஜன், அமுதா முனியாண்டி, ராம்குமார், பெருமாள் இராமன், குளோரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

ராஜசேகரன் அணி சார்பில் டாக்டர் நவமணி, டாக்டர் சித்ரா, பால்மிரா பிபி, டத்தோ டாக்டர் சுகுமாறன், டாக்டர் ராஜசேகரன் மோகன், டத்தோ சி.எம். விக்னேஸ்வரன், டாக்டர் மரியா ரூபினா, பிரவின் தமிழ் செல்வம், குட்டி கிருஷ்ணன் ராயர்,  டோனி கிளிபெர்ட்,  மீனாட்சி கல்யாண சுந்தரம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

மேலும் ஜமுனா சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்.

வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் ஆண்டு கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் குழு தலைவர்  ராஜசுந்தரம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

-காளிதாசன் இளங்கோவன் / தீபன் கிருஷ்ணன்

0 Comments

leave a reply

Recent News