loader
கேகேபி இடைத்தேர்தல்: ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்! -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கூறுகிறார்

கேகேபி இடைத்தேர்தல்: ஜசெக சார்பில் மலாய் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்! -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப்.16-

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை பிரதிநிதித்து கோல குபு பாருவில் ஜசெக போட்டியிடவுள்ளது. அங்கு மலாய் வாக்காளர்கள் அதிகமாக இருப்பதால் அந்த கட்சியை சேர்ந்த மலாய் வேட்பாளர் அங்கு நிறுத்தப்பட வேண்டுமென பக்காத்தான் ஹராப்பான் தலைவர் கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்காளர்களை கருத்தில் கொண்டு இந்த கருத்தை முன்வைப்பதாக சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் துணைத் தலைவர் பொர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.

கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில் 40,226 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 46 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள். அதனை தொடர்ந்து 30% சீனர்கள், 18% இந்தியர்கள், 5% இதர வாக்காளர்கள் உள்ளனர். ஆகையால் இந்த சூழலை அறிந்து அங்கு மலாய்க்கார வேட்பாளர் நிறுத்தப்படுவது அவசியமாகும்.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் டுசூன் துவா தொகுதியில் ஜசெக மலாய் வேட்பாளரை (எட்ரி பைசால் ஹெடி யூசோப்) நிறுத்தி வெற்றிப்பெற்றது. 15ஆவது பொதுத் தேர்தலில் பெந்தோங் நாடாளுமன்ற தொகுயில் மலாய்க்காரைதான் அக்கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அந்த வகையில் இம்முறை மலாய்க்கார வேட்பாளரை ஜசெக நிறுத்த வேண்டும்.

இந்த இடைத் தேர்தல் நாட்டு மக்களின் முழு கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகையால் சிறந்த நிபுணத்துவ மிக்க வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நம உள்ளோம். மேலும் இந்த தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் கடும் போட்டியாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News