loader
KLIA துப்பாக்கிச் சூடு சம்பவம்  பொது மக்களின் பாதுகாப்பை போலீஸ் உறுதி செய்தது!

KLIA துப்பாக்கிச் சூடு சம்பவம் பொது மக்களின் பாதுகாப்பை போலீஸ் உறுதி செய்தது!

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

நேற்று கே.எல்.ஐ.ஏ (KLIA) அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவனை பிடிக்கும் முயற்ச்சியை போலீசார் எதிர்கொண்டபோது அங்கு இருந்த பொதுமக்களின் பாதுகாப்யையும் அவர்கள் உறுதி செய்ததாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆடவர்  மேற்கொண்ட துப்பாக்கி சூட்டுக்கு போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி இருந்தால் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும் சேதாரங்கள் ஏற்பட்டிருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை 1.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், ஹபிசுல் மராவி என்ற சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கியால் தனது மனைவியை சுடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சமயம் அந்த பெண்ணை பாதுகாத்த பாதுகாவலரான முகமட் நூர் ஹதித் ஜைனி, வயது 38 பலத்த காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேலும் இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வரும் ஆடவர் இன்னும் உள்நாட்டில்தான் இருக்க வேண்டும். அந்த ஆடவர் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News