loader
TSV'S சாகச நடைப்பயணம் பாதுகாப்பாக நிறைவு செய்த இளைஞர்கள்!

TSV'S சாகச நடைப்பயணம் பாதுகாப்பாக நிறைவு செய்த இளைஞர்கள்!

கோம்பாக், ஏப்ரல்.15-

உடற்பயிற்சியின் மூலம் இளைஞர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்கை முறையை உணர்த்தும்   நோக்கத்தில் TSV'S எனும் சாகச நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று சித்திரை புத்தாண்டையொட்டி காலை 8 மணி முதல்  கோம்பாக் டெம்பிளர் பார்க் கஞ்சிங் நீரூற்று மலைப் பகுதியில் இந்த சாகச நடைப்பயணம் தொடங்கப்பட்டது. 

சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவினர் மற்றும் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR இயக்கம் இணைந்து நடத்திய இந்த சாகச நடைப்பயணத்தில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த சுமார்  100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்ற அனைவரும் சாகசத்தை தாண்டி பல்வேறு சவால்களை எதிர்நோக்கி பாதுகாப்பாக இப்பயணத்தை முழுமைப்படுத்தி திரும்பியதாக ஏற்பாட்டாளர் PERTUBUHAN PENGERAK SEBAYA SELANGOR தலைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

மேலும் ம.இ.கா.வின் தேசிய விளையாட்டு குழு மற்றும் ம.இ.கா.வின் தேசிய இளைஞர் விளையாட்டு குழுவுடன் இணைந்து இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த தனது வாழ்த்துக்களையும் முழு ஆதரவையும் வழங்கி ஊக்குவித்த  மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் அவர்களுகளுக்கு ஏற்பாட்டுக்குழு சார்பாக அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்து எடுத்து நடத்திய தேசிய ம.இ.கா இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அதன் செயளாலர் அரவிந்த் கிருஷ்ணன், சிலாங்கூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் சுந்தர், கோம்பாக் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் கோபிராஜ் உட்பட அனைவருக்கும் அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News