loader
இந்திய பெண்களை வியாபாரத்தில் முன்னேற்ற (PENN ) திட்டத்தின் வாயிலாக   50 மில்லியன் கூடுதல் நிதி அமானா இக்தியார் வழி வழங்கப்படும் ! - டத்தோ ரமணன்

இந்திய பெண்களை வியாபாரத்தில் முன்னேற்ற (PENN ) திட்டத்தின் வாயிலாக 50 மில்லியன் கூடுதல் நிதி அமானா இக்தியார் வழி வழங்கப்படும் ! - டத்தோ ரமணன்

கோலாலம்பூர் ஏப்ரல்- 13

10 ஆயிரம் பெண்  வியாபாரிகளை உருவாக்கும் நோக்கத்தில்  தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை அமைச்சின் கீழ் செயல்படும் அமானா இக்தியார் அமைப்பின் வாயிலாக ,  (PENN ) என்ற திட்டத்தின் வாயிலாக கூடுதல் நிதியாக 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டதாக , தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோ ரமணன் இன்று அறிவித்தார்.

இதன் வாயிலாக இந்திய பெண் வியாபாரிகள் மேம்பாட்டிற்கு இந்த ஆண்டு,  71 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜனவரி மாதம், 21 மில்லியன் ஒதுக்கப்பட்டதாகவும் டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்த நிதியின் வாயிலாக ஏற்கனவே அமானா இக்தியாரில் சஹாபாட்டாக செயல் படும் 3,100 இந்திய பெண் வியாபாரிகள் பயன் அடைவதோடு, இந்த சிறப்பு நிதியால் புதிதாக 7100 புதிய இந்திய பெண் வியாபாரிகள் உருவாக்கப்படுவார்கள் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.  

இதன் வழி 10 ஆயிரம் பெண்  வியாபாரிகள் பயன் அடைவார்கள் என தெரிவித்த டத்தோ  ரமணன், இந்த சிறப்பு நிதி வாயிலாக 30 ஆயிரம் வெள்ளி வரை பெண் வியாபாரிகள் கடன் பெறலாம் என்றார் .

வரும் 15 ஏப்ரல் முதல் நாட்டில் உள்ள 124 அமானா இக்தியார் கிளைகளில் அவர்கள் விண்ணப்பம் செய்ய தொடங்கலாம் என டத்தோ ரமணன் தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர் - இ.எஸ்.காளிதாசன்

0 Comments

leave a reply

Recent News