loader
கே.கே.பி-க்குச் சுற்றுலா செல்லும்  அரசியல் தலைவர்கள் !

கே.கே.பி-க்குச் சுற்றுலா செல்லும் அரசியல் தலைவர்கள் !

கோலாலம்பூர் - ஏப்ரல் 8

கோலா குபு பாரு  என்ற  பகுதி அங்கே தான்   இவ்வளவு காலம் உள்ளது  அந்த பகுதி வாழ் மக்களும் அங்கே தான் உள்ளனர் இத்தனை நாளும் . ஆனால் இது நாள் வரை இவர்களைச் சென்று பார்க்க வேண்டும் என்று எந்த அரசியல் தலைவருக்கும் அமைச்சர்களுக்கும் அக்கறை  இருந்தது இல்லை. அங்குள்ள மக்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்கிறார்கள் என யாரும் பேசியதும் இல்லை.

ஆனால் இப்போது ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அங்கு சுற்றுலா செல்கின்றனர். அதிலும் இந்தியர்கள் வாழும் பகுதிக்கு செல்கிறார்கள் . இது எதற்கு ?

மிக விரைவில் அங்கு ஒரு  சட்டமன்ற இடைத்தேர்தல் வருவதால் இந்த பாசம்.  இந்த நேரத்தில் தான் அரசியல்வாதிகள் நலம் விசாரிப்பார்கள் ,  கை கொடுப்பார்கள் படம் எடுப்பார்கள் ஏன் அங்குள்ள பிரச்சினை பற்றி மைக் பிடித்து பேசுவார்கள். ஏன்  மந்திரி பெசார்  கூட ஓர்  இந்தியர்  வீட்டிற்கு வந்து பாட்டியை நலம்  கூட விசாரிப்பார்.

அதுக்கும் ஒரு படி மேலே சென்று பிரதமர் கூட உங்க வீட்டிற்கு வந்து  எனக்கு தோசை மிகவும் பிடிக்கும் என சொல்லும் வாய்ப்பும் உள்ளது.

அதனால் மக்களே! பலர் வருவார்கள், செல்வார்கள், இனிப்பாக பேசுவார்கள். காரணம் இந்த 18 விழுக்காடு இந்தியர்களின் வாக்கு அவர்களின் வெற்றிக்கு ரொம்ப முக்கியம்.

அதனால்  கே.கே.பி மக்களே இது உங்களுக்கான நேரம் 
சிந்தித்து அமைதியாக அனைத்து கூத்துகளைப் பார்த்து ரசித்து, வேட்பாளர் யார் என்பதை பார்த்து, அவர் பின்னனியை ஆய்வு செய்யுங்கள்.

இந்த அரசும்  இந்த தலைமையும்  இந்திய சமுதாயமத்தைத் திரும்பி பார்க்க வைக்கும்   பதிலாக  உங்கள்  வாக்கு  இந்த தேர்தலில் இருக்க வேண்டும்.

இது தான் சரியான நேரம். தொடங்கட்டும் ஜனநாயகத்தின் மக்களின்  ஒரு விரல் புரட்சி.


செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News