loader
டத்தோ டி .மோகன் தலைவராக வருவதில் யாருக்கும்  சிக்கல் இல்லை !  ஆனால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்... அது தான் சிக்கல்!

டத்தோ டி .மோகன் தலைவராக வருவதில் யாருக்கும் சிக்கல் இல்லை ! ஆனால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்... அது தான் சிக்கல்!

கோலாலம்பூர்,ஏப்.3-

கடந்த காலங்களில் ம.இ.காவை பிளவு படுத்த ஓர் கூட்டம் இருந்தது. அது ஜாதி என்ற போர்வையில் இருந்தது. அதனால்தான் ம.இ.காவிற்குள் அடித்துக் கொண்டார்கள் என்பது வரலாறு.

இதனால் ஜாதி அரசியல் செய்யும் நபர்களை ஒரு படி எப்போதும் தமிழ் லென்ஸ் தள்ளியே வைக்கும். குறிப்பாக   ஜாதி துதி பாடும்   நபர்கள் சமுதாயத்தின் நோய் .

இந்த நோய் கொஞ்ச காலமாக ம.இ.கா அரசியலில் ஊடுருவாமல் இருந்தது. இப்போது ஊடுருவ தொடங்கி விட்டது என்பதே தமிழ் லென்ஸ் சமுதாயத்திற்கும் ம.இ.காவிற்கும் கொடுக்கும் எச்சரிக்கை செய்திதான் அது .

அந்த வகையில்  அன்வார் துதி பாடி , பத்திரிக்கை நடத்தும் ஓம்ஸ் தியாகராஜன், தமிழ் லென்ஸ் யாரையோ துதி பாடி செய்தி எழுதி உள்ளதாக சொன்னது  வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் சொல்ல சொல்ல செய்தி எழுதும் கூட்டத்தை தானே நீங்கள் பார்த்து பழகியுள்ளீர்கள்.. அதனால் அப்படி தான் யோசிக்க தோனும்.  என் கையை பிடித்து எழுத எவராலும் முடியாது. அதனால்  தாம் இந்த துதி கூட்டத்தில் வேலை செய்யாமல் சொந்த ஊடகம் நடத்தி வருகிறேன் என்பதை ஓம்ஸ் தியாகராஜன் அவர்களுக்கு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மற்றொரு விஷயம் என்னவென்றால்,  கருங்காலி, பாவாடை இதுபோன்ற சொல்லை கொண்டு எழுதும் பழக்கம் எனக்கு இல்லை. என் அடையாளம் என் மொழி. பிறகு ஜாதி அரசியல் செய்பவர்களை எனக்கு பார்க்கவும் பிடிக்காது அவர்களுடன் பழகவும் பிடிக்காது.

ம.இ.கா-வை மட்டம் தட்டி  ஒவ்வொரு நாளும் அறிக்கை விடும் ஓம்ஸ் தியாகராஜன், மஇகாவினர் செய்த நல்லதை என்றாவது எழுதியது உண்டா? 

இங்கு ம.இ.கா தலைவராக டத்தோ டி. மோகன் வருவதில் யாருக்கும் சிக்கல் இல்லை. ஆனால் அதை நீங்கள் சொல்வதில்தான் சந்தேகமே வருகிறது.  வட்டார மொழியில் ஒன்று சொல்வார்களே ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம் அந்த கதை போல் நீங்கள் ம.இ.கா மீது அக்கறையாக பேசுவது தான்  சந்தேகத்தையும் , சிக்கலை உண்டாகுகிறது.

நீங்களோ பி.கே.ஆர் தலைவர் அன்வாரின் ஆதரவாளர். மஇகாவை பற்றி நல்லதே பேசாத உங்களுக்கு ம.இ.கா மீது திடீர் அக்கறை வந்ததுதான் வேடிக்கையாக உள்ளது.

கடந்த காலங்களில் உங்களை பார்க்க வந்தவர், உங்களிடம் கைகட்டி நின்றவர்கள் அது எல்லாம் எங்களுக்கு தேவை இல்லாத கதை. என்னோடு இருக்கும் செய்தி குழு யாரிடமும் கைகட்டி நிற்காது.

எங்களை பொருத்தவரை ம.இ.கா ஒரு பழைமை வாய்ந்த கட்சி. சில நாரதர்கள் பேச்சை கேட்டு உள்ளுக்குள்ளே  ஜாதியால் பிளவு பட்டு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல்   தெருவில் அடித்து கொள்ள கூடாது என்பதை  உணர்த்தி அவர்களை எச்சரிக்க வேண்டிய கடமையும் எங்களுக்கு உண்டு. 

அதைச் சொல்வதால்  தமிழ் லென்ஸ் யாருக்கும் துதி பாடும் செய்தி ஊடகமாக ஆகாது.  எங்களுக்கு ம.இ.காவையும் கேள்வி கேட்க தெரியும். பக்காத்தனையும் கேள்வி கேட்க தெரியும். ஏன் பெரிக்காத்தனையும் கேள்வி கேட்க தெரியும். காரணம் தமிழ் லென்ஸ் பத்திரிக்கை காரர்கள் நடத்தும் ஊடகம்.

செய்தி: வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News