loader
கூச்சிங் கேகே மார்ட்டில் தாக்குதல்!  அனைவரும் அமைதி காக்க வேண்டும்! -பஃட்டிலா யூசோப்

கூச்சிங் கேகே மார்ட்டில் தாக்குதல்! அனைவரும் அமைதி காக்க வேண்டும்! -பஃட்டிலா யூசோப்

கோலாலம்பூர், ஏப்.2-

நாட்டில் கேகே மார்ட் கிளைகளில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தற்போது மூன்றாக பதிவாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கூச்சிங்கில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ள வேளையில் பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுமென துணைப் பிரதமர் பஃட்டிலா யூசோப் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவர். இந்த விவகாரத்திற்கு உடண்டி தீர்வு காணப்பட வேண்டுமென பெட்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

கேகே மார்ட்டில் அல்லா எழுத்து அச்சிடப்பட்ட காலுறை விற்கப்பட்டதை தொடர்ந்து மூன்று தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. முதல் சம்பவம் பீடோ பேராவிலும் இரண்டாவது சம்பவம் குவாந்தான் பகாங்கிலும் தற்போது ஜாலான் சாத்தோக் கூச்சிங்கிலும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என அவர் சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் கேகே மார்ட் உரிமையாளர் பொது மன்னிப்பு கேட்டதுடன் அவர் மீதும் சம்பந்தப்பட்ட காலுறைகளை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது வழங்கு தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

leave a reply

Recent News