loader
வரி பாக்கி உள்ள 180,000 ற்க்கும் மேற்பட்டோர்ருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது!

வரி பாக்கி உள்ள 180,000 ற்க்கும் மேற்பட்டோர்ருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது!

கோலாலம்பூர், ஏப்.1-

வரி பாக்கியுள்ள 182,666 தனிநபர்கள் வெளிநாடு செல்வதற்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் திகதி முதல் LHDN தடை விதித்துள்ளது. 

வருமான வரி பாக்கி உள்ள தனிநபர்களின் எண்ணிக்கை  171,571 மற்றும் சொத்து லாப வரி பாக்கி உள்ள தனிநபர்களின்  எண்ணிக்கை 11,095 பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி துறை துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

ஐஆர்பி பிரிவு 104, வருமான வரிச் சட்டம் 1967 மற்றும் பிரிவு 22, ரியல் எஸ்டேட் ஆதாய வரிச் சட்டம் 1976 ஆகியவற்றின் கீழ் சட்ட  விதிகளின்படி முறையாக வருமான வரி செலுத்தாத நபர்களுக்கு வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

அவ்வகையில் வருமான வரி பாக்கிகள் அல்லது ரியல் எஸ்டேட் லாப வரியை இன்னும் செலுத்தாத எந்தவொரு தனிநபருக்கும் வெளிநாட்டு பயணத்திற்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிநுலைவுத் துறையின் ஒத்துழைப்போடு இந்த பயணக் கட்டுபாடு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன், வரி செலுத்துவோருக்கு, கடிதங்கள் மின்னஞ்சல்கள் மற்றும்  தொலைபேசி அழைப்புகள் மூலம் வரி பாக்கிகள் குறித்த முன் அறிவிப்புகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்தார்.

மேலும் வரி செலுத்துவோர் MyTax போர்ட்டல் மூலம் தங்களின் வரி பாக்கி நிலையை சரிபார்க்கலாம், அதோடு  மலேசிய குடிநுலைவுத்  துறையின் இணையதளத்தில் பயணக் கட்டுப்பாடுகளைச் சரிபார்க்கலாம் என்று அவர் கூறினார்.

0 Comments

leave a reply

Recent News