loader
பிற மதத்தை இழிவு படுத்துவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! மை பிபிபி சார்பில் போலீஸ் புகார்! -டத்தோ லோகபாலா

பிற மதத்தை இழிவு படுத்துவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்! மை பிபிபி சார்பில் போலீஸ் புகார்! -டத்தோ லோகபாலா

கோலாலம்பூர், ஏப்ரல்.1-

எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை  நாங்கள் பின்பற்றி வருகிறோம்.பிற மதத்தை இழிவு படுத்துவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என மை பிபிபி கட்சியின் சார்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டது என அதன் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

ஒருவர் மற்றொருவரின் மதத்தை இழிவு படுத்துவதை நாம் ஒருபோதும் விடக்கூடாது. யாராக இருந்தாலும் அவர் நிச்சயம் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக மை பிபிபி கட்சியின் சார்பில் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் செந்தூல் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்துள்ளார்.

தற்பொழுது இந்து மதக் கடவுளை ஷம்ரி வினோத் என்பவர் இழிவு படுத்தி பேசிய விவகாரம் நாட்டில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்பாக மலேசிய இந்திய சமூகத்தினர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் போலீஸ் புகார்களை செய்து வருகின்றனர். இதற்கு மை பிபிபி கட்சியின் தலைவர் என்ற முறையில் மட்டுமல்லாமல் ஓர் இந்து என்ற அடிப்படையில் நான் என்னுடைய ஆதங்கத்தையும் தெரிவிக்கின்றேன்.

நாங்கள் பல்லின கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்விவகாரத்தில் நாங்கள் தலையிடக்கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை. எங்களின் கட்சியில் அனைத்து மதத்தை சார்ந்த உறுப்பினர்களும் உள்ளனர். ஆகவே தனி ஒரு மதத்தை இழிவுப் படுத்தி பேசும் நபர்களை நிச்சயம் நாங்கள் தட்டிக் கேட்போம். 

நாளை இச்சூழ்நிலை எந்த மதத்தை சார்ந்தவர்களுக்கும் ஏற்படலாம். அப்போதும் நாங்கள் இது போன்ற செயல்களுக்கு எதிர்பாக இருப்போம். ஏன் என்றால் மை பிபிபி கட்சி எம் மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின் பற்றி செயல்படுகிறது என்பதை டத்தோ லோகபாலா ஆணித்தரமாக தெரிவித்தார்.

நேற்று செந்தூலில்  நடைபெற்ற 2024 விலாயா மாநில மைபிபிபி ஆண்டு பேராளர் மாநாட்டின் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நேற்று இவ்விவகாரம் தொடர்பில் இந்து மதத்தை இழிவு படுத்திய நபர்கள் மீது 3 ஆர் சட்டத்தின் கீழ் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக  மை பிபிபி கட்சியின் சார்பில் விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் செந்தூல் காவல் நிலையத்தில் போலீஸ் புகார் செய்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News