loader
அமைச்சரவையில் பேச தமிழ் பேசும் ஒரு முழு  இந்திய அமைச்சர்  இல்லை !   துணை அமைச்சர்களோ   அடித்து கொள்கிறார்கள் !  ஆளுமைமிக்க  தலைவர் இல்லாமல் இந்தியச் சமுதாயம் நாதியற்று கிடக்கிறது !

அமைச்சரவையில் பேச தமிழ் பேசும் ஒரு முழு இந்திய அமைச்சர் இல்லை ! துணை அமைச்சர்களோ அடித்து கொள்கிறார்கள் ! ஆளுமைமிக்க தலைவர் இல்லாமல் இந்தியச் சமுதாயம் நாதியற்று கிடக்கிறது !

கோலாலம்பூர் மார்ச் - 31

அமைச்சரவையில் இந்தியர்கள் சார்ந்த ஒரு தமிழ் பேசும் அமைச்சர் இல்லை என சமுதாயதம் அதிருப்தி  தெரிவித்த போது, அது எல்லாம் தேவை இல்லை எனச்  சொல்லி ,
துணை அமைச்சர் பதவி கிடைத்ததும் ,  பிரதமரின்  முடிவுக்கு முட்டு கொடுத்த தலைவர்கள்  இன்று அவர்களுக்குள்  ஒருவரை ஒருவர் சாடி அடித்து கொள்ளும் அவல நிலை தற்போது அரங்கேறி வருகிறது.

இங்கு இந்தியர்களின் கல்வி , சமூக பிரச்சினை,  மருத்துவம், வாழ்வாதாரம் , என அமைச்சரவையில் பேச  ஓர் ஆளுமை மிக்க இந்திய தலைவர் இப்போது இல்லை.

மித்ரா விவகாரத்தில் இந்திய தலைவர்களை,  அது சார்ந்த  அமைச்சர்கள்  மதிக்கவில்லை  என இந்திய  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்  கூச்சலிடுக்கின்றனர்.

ஓர் இந்திய அமைச்சர் தேவையில்லை என சொன்ன துணை அமைச்சர்களும் இப்போது ஒருவருக்கு ஒருவர் கருத்து மோதலில் குறைச் சொல்கின்றனர்.

இதில் வேடிக்கை , சொந்த கட்சி , சொந்த கூட்டணியில் உள்ளவர்களே இங்கு  அடித்து கொள்வதுதான்.

இதற்கு காரணம் இந்த கூட்டணியில் ஆளுமை மிக்க  இந்திய தலைவர்  இல்லை என்பது இவர்களின் பலவீனம்.

60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ம.இ.காவில்  ஒரு ஆளுமை  இருந்தது. அந்த ஆளுமை தலைவர்களின்  செயல்பாடு, முடிவுக்கு  கட்சி கட்டுப்பட்டு, ஒரு மனதாக  மக்கள் பிரச்சினைகள்  அமைச்சரவையில் பேசப்படும்.

ஆனால் இப்போது, ஒரு மித்ரா விவகாரத்திலேயே  இவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, ஒரு மித்த முடிவு இல்லை , பதவி சண்டை , யார் பெரியவர், அரசாங்கத்தில் இந்தியர் குரலாக யார் இருக்க வேண்டும் என சண்டை.

இவர்களின்  சண்டை ஒரு புறம் இருக்க, நீங்க ஏதோ ஒன்று செய்யுங்க பா...  என ம.இ.கா ஒரு தனி பாணியில், கட்சி வேலை,  கட்சி மேம்பாடு , கட்டட வேலை, அவர்களை தேடி வரும் மக்களுக்கு உதவி என  அரசாங்கத்தில் நடத்தும் கூத்தை கைக்கட்டி வேடிக்கை பார்க்கிறது. 

மக்கள் அழைக்காத வரை நாங்கள் அமைதியாக  ,அரசரின் ஆலோசனை படி இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு  கொடுத்து ஒரு பார்வையாளர்களாக நாங்கள் இருப்போம் என   ம.இ.கா ஒதுங்கி நிற்கிறது.

இந்தியச் சமுதாயமோ ஆளுமை மிக்க ஒரு தலைமை , தலைவர் இல்லாமல் நாதியற்று கிடக்கிறது !


செய்தி :  வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News