loader
இதுவரை 35 விழுக்காட்டினர் மட்டுமே PADU-வில் பதிந்துள்ளனர்!  தெளிவான விளக்கத்தை தர அரசு தவறிவிட்டது!

இதுவரை 35 விழுக்காட்டினர் மட்டுமே PADU-வில் பதிந்துள்ளனர்! தெளிவான விளக்கத்தை தர அரசு தவறிவிட்டது!

கோலாலம்பூர், மார்ச் 26-

இம்மாதம் இறுதிக்குள் PADU-வில் மக்கள் தங்களின் விவரங்களை பதிந்து கொள்ள வேண்டுமென அரசு வலியுறுத்தி வந்தாலும் இதுவரை 35 விழுக்காட்டினர் அதாவது சுமார் 7.36 மில்லியன் மக்கள் மட்டுமே அதில் பதிவு செய்துள்ளனர்.

PADU செயல்பாடு குறித்த தெளிவான விளக்கத்தை மக்களுக்கு வழங்குவதில் அரசு தோல்விக் கண்டு விட்டது. முழுமையான  விளக்கம் மக்களை சென்றடையாத பட்சத்தில் தங்களின் சொந்த விவரங்களை வழங்குவதில் மக்கள் தயக்கம் கொண்டுள்ளனர்.

மேலும் PADUவில் பதிவு செய்வதற்கான வழிமுறைகளும் கடினமாகவும் அதிகமான தனி விவரங்களை கேட்பதனாலும் மக்கள் அதில் தங்களை பதிந்துகொள்ள தயங்குகின்றனர்.

இதுநாள் வரை அரசாங்கத்திடம் எங்களை பற்றிய விவரங்கள் இல்லையா? ஏன் மீண்டும் எங்களின் சுயவிவரங்களை கேட்கின்றனர்? நாங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பாக இருக்குமா? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக ஹில்ஹாம் செண்டர் தலைமை இயக்குநர் ஹிசோமுடின் பகார் தெரிவித்துள்ளார்.

மக்கள் தனி விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்றும் எந்தவொரு தனியார் நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி கூறியிருந்தபோதிலும் மக்களுக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை என்பது இதுவரை PADU-வில் பதிவி செய்தவர்களின் எண்ணிக்கை காட்டுகிறது.

PADU பதிவில் மக்களின் கடன், சொத்து, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் என பல கேள்விகள் கேட்கப்படுவதால் மக்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. 

ஆரம்பத்திலேயே இந்த தயக்கத்தை போக்க தெளிவான விளக்கத்தை அரசு மக்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி மக்களின் தனி விவரங்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்தி மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருக்க வேண்டுமென முவமாலாட் வங்கியின் பொருளாதார பிரிவு தலைவர் முகமட் அவ்ஜானிஜாம் கூறியுள்ளார்.

இந்த காலக் கட்டத்தில் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான தொடர்பு வீக்கமாக உள்ளது. உதவித் தொகையின் பற்றிய தெளிவின்மை, இணைய பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய வதந்திகள் மக்களை குழப்பமடைய செய்துள்ளது. இந்த பிரச்சினையை அரசு முறையாக கையாழவில்லை எனவும் அவர் சொன்னார்.

மக்களின் மத்தியில் PADU பற்றி கேட்டதில், அதிகமானோர் அதில் அக்கரை இல்லை என்பது தெரிவருகிறது. சிலர் தங்களின் முதலாளிகளின் வற்புறுத்தலின் காரணமாகதான் PADU-வில் பதிந்துள்ளனர். மக்களிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறுவேற்றுவதில் அரசு தோல்வி கண்டு விட்டது. விலை வாசி அதிகரித்து விட்டது. எங்களால் தாக்குபிடிக்க முடியவில்லை. இனியுன் அரசு சொல்வதை நம்ப முடியாது என மக்களில் சிலர் கூறுகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News