loader
இனவாத பேச்சை பேசும் மத பேச்சாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்! -இந்திய மக்கள் பிரநிதிகள்

இனவாத பேச்சை பேசும் மத பேச்சாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்! -இந்திய மக்கள் பிரநிதிகள்

கோலாலம்பூர்,மார்ச் 26-

முஸ்லிம் அல்லாத மதங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில மத பேச்சாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நாட்டில் இந்தியர்கள் அதாவது இந்து மதத்தை அவமதித்து பேசிய சம்ரி வினோத்தும் இதில் அடங்குவார் என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கூறினார்.

அண்மையில் புதிய மக்களவை அமர்வின்போது 3R எனப்படும் சமயம், இனம், அரசர் பற்றி பேசும் நடவடிக்கைகள் கூடாது என்றும் பேரரசர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் சம்ரி வினோத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்களவையிலுள்ள இந்திய பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

அண்மையில் வெளியான டிக் டோக் காணொயில் மத பேச்சாளர் சம்ரி வினோத் இந்துகளின் செய்வமான சிவபெருமானை பற்றி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஆகையால் அவர் மீது உள்துறை அமைச்சும் ஒற்றுமைத் துறை அமைச்சும் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டுமென ராயார் சொன்னார்.

இன்று மக்களவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ராயாருடன் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், செனட்டர் லிங்கேஸ்வரன், செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 Comments

leave a reply

Recent News