loader
வைரமுத்து வருகைக்கு   தாண்டி குதித்த ஹிந்து  தர்ம மாமன்ற தலைவர்  ராதாகிருஷ்ணன்!  சம்ரி வினோத் விவகாரத்தில் பூனையாக  இருக்கிறார்  ! (பூ)னை  பத்திரிக்கையில் இருந்து சிக்னல் வரவில்லையா

வைரமுத்து வருகைக்கு தாண்டி குதித்த ஹிந்து தர்ம மாமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன்! சம்ரி வினோத் விவகாரத்தில் பூனையாக இருக்கிறார் ! (பூ)னை பத்திரிக்கையில் இருந்து சிக்னல் வரவில்லையா

கோலாலம்பூர் மார்ச்- 25

சமயத்தைக் காக்கின்றோம் இந்துக்கள் மனம் புண்ணாகிவிட்டது என தமிழர்கள், தமிழ் நாட்டு அரசியல் இதில் மட்டும் கவனம் செலுத்தும் ஹிந்து தர்ம மாமன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழர்கள் என்று வந்தால் மட்டும் தாண்டி குதிக்கிறார். 
சொந்த நாட்டில்  மற்ற இனத்தால்  இந்துகள் அவமானப்படுத்தப்பட்டால்  பூனை போல்  இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார் என சமூக ஆர்வலர் ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். இவர் உண்மையில பூனையா ?  இல்லை  பூ(னை) பத்திரிக்கையில் இருந்து  இவருக்கு சிக்னல் இன்னும் வரவில்லையா?  , அந்த சிக்னல் கிடைத்தால் உடனே அறிக்கை விட்டு விடுவார் போல என ஆறுமுகம் தெரிவித்தார்.

அண்மையில் கவிப்பேரரசு  வைரமுத்துவின் மகா கவிதை புத்தகத்திற்கு மலேசியத்  தமிழர்கள் விருது கொடுக்க ஏற்பாடு செய்த போது,  அழைக்காத விருந்தாளி வீட்டில் இலை போடு என சொன்னது போல்,  தாண்டி குதித்து  வைரமுத்து மலேசியாவிற்கு வரக்கூடாது, இந்துகள் எதிர்க்க வேண்டும், நாடு தழுவிய நிலையில் புகார் செய்ய வேண்டும், உள் துறை அமைச்சரிடம் புகார் செய்யவேண்டும் என  பத்திரிக்கை அறிக்கை விட்டு வானத்திற்கும் பூமிக்கும் குதித்த ராதாகிருஷ்ணன் இப்போது சம்ரி வினோத் விவகாரத்தில் பூனை போல் பதுங்கி இருப்பது ஏன் எதனால் என ஆறுமுகம் கேள்வி எழுப்பினார்.

உங்கள் வாய் சவடால், வீரம் எல்லாம் தமிழ் கவிஞர் வைரமுத்துவிடம் தான் வரும், இந்த நாட்டில் இந்துகளை தொடர்ச்சியாக அவமானம் செய்யும்  நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் உள்துறை அமைச்சரை  நாடவில்லை, ஏன் பிரதமரை  நாடவில்லை ? சம்ரி வினோத்தை பார்த்து ராதாகிருஷ்ணன் பயப்படுகிறாரா ?  இல்லை  அவர் பின்னாள் இருக்கும் கூட்டத்தை பார்த்து பயப்படுகிறாரா ? 

தமிழர்கள் மத்தியில் வந்த வீரம் சம்ரி வீனோத்திடம்  ஏன் இல்லை என ஆறுமுகம் கேள்வி எழுப்பியதோடு போங்க பா.... போய் புகார் , வீதி போராட்டம், உள்துறை அமைச்சரிடம் புகார் கொடுங்க என்றார்.

ஒரு தமிழ் வாழ்த்து பாடலுக்கு  மரியாதை செய்ய தெரியாத இந்து தர்ம மாமன்ற ரிஷி குமார் , இன்று சந்தேஸ் பாடிய பாடலை பாராட்டுகிறார். அவருக்கு உள்ள தைரியம் கூட ரிஷிக்கு இல்லை. என்பதுதான் வேடிக்கை !

தமிழ் வாழ்த்தில் திமிர் தனம் காட்டிய ரிஷிக்கு சம்ரி வினோத்தை எதிர்த்து பேச வாய் இல்லை.
இவர்களின் திமிர்தனம் தமிழர், தமிழர் சார்ந்த நிகழ்ச்சியில் மட்டும் தான் வெளிப்படும்.  மற்ற இடத்தில் இவர்கள் பூனை என ஆறுமுகம் சாடினார்.

0 Comments

leave a reply

Recent News