loader
மின்னியல் சிகரெட்   காரணமாக 10 பேர் உயிரிழப்பா? காவல்துறை மறுப்பு!

மின்னியல் சிகரெட் காரணமாக 10 பேர் உயிரிழப்பா? காவல்துறை மறுப்பு!

ஷா ஆலாம்,மார்ச் 26-

தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மேஜிக் மஷ்ரூம் வகை மின்னியல் சிகரெட் காரணமாக 10 சிறுவர்கள் இறந்தது குறித்து காவல்துறைக்கு எந்த புகாரும் வரவில்லை என காவல்துறை தெரிவித்தது.

கடந்த சனிக்கிழமை டிக் டாக் வலைத்தளத்தில் மின்னியல் சிகரெட் காரணமாக 10 சிறார்கள் உயிரிழந்ததாக தகவல் பகிரப்பட்டது, பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இம்மாதிரியான போலி தகவலை பரப்பி பொது மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என கோல சிலாங்கூர்  மாவட்ட போலிஸ்  தலைவர் சூப்பரிண்டண்டெண் ராம்லி காசா கேட்டுக்கொண்டார்.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சமூகதலவாசிகள் அதன் கோட்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி பயன்படுத்த வேண்டும். போலி தகவலையும் முறையற்ற செயல்களையும் பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராம்லி காசா எச்சரித்தார்.

0 Comments

leave a reply

Recent News