loader
மித்ராவில் மீண்டும் ஆய்வா ? மக்களை ஏமாற்றும் செயல் ! -டத்தோஸ்ரீ தனேந்திரன்

மித்ராவில் மீண்டும் ஆய்வா ? மக்களை ஏமாற்றும் செயல் ! -டத்தோஸ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர், மார்ச் 18-

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவில் மீண்டும் ஆய்வை மேற்கொள்வதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.

செடிக் என உருவாகிய இந்த பிரிவு தற்போது மித்ரா என பெயர் மாற்றம் கண்டுள்ளது. இந்திய சமுதாயத்தின் உருமாற்றம் குறித்த ஆய்வு அப்பொழுதே செய்யப்பட்டு விட்டது. மேலும் இந்திய மேம்பாட்டு திட்ட வரைவை அமலுக்கு கொண்டு வந்தாளே போதும், இந்திய சமுதாயம் சார்ந்த எந்த ஆய்வினையும் செய்யத் தேவையில்லை என அவர் சொன்னார்.

கடந்த காலத்தில் மித்ராவின் மூலம் இந்திய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி,  அரசு சாரா இந்திய அமைப்புகளுக்கு மானியம் வழங்குதல், இளைஞர்களை மேம்படுத்தும் நிகழ்ச்சிகள், பி40 மக்களுக்கான உதவிகள் என பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அவை அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டின் முதல் தவனை முடிவடையும் நிலையில் இன்னுமும் மித்ராவில் ஆய்வை மேற்கொண்டிருந்தால் மக்களுக்கான உதவிகள் எப்பொழுதுதான் வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.

தற்போது நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளது. வரிச் சுமை, நாணய வீழ்ச்சி என பலவற்றால்,  குறைந்த வருமானம் பெரும் குடும்பத்தினர் பல இன்னல்களுக்குள்ளாகி உள்ளனர். 

இந்நிலையில் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மானியம் வழங்குவது இழுப்பறியாக இருந்தால் அது மக்களுக்கு இன்னும் கூடுதல் இன்னலை விளைவிக்கும் என அவர் சொன்னார்.

ஆகையால் மித்ராவில் ஆய்வை மேற்கொள்வதை நிறுத்தி விட்டு செயல் திட்டத்தில் இறங்குங்கள். பிரதமர் துறையின் கீழ் மித்ரா இருந்தபோது அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது. இந்த பிரிவு ஆரம்பமானதே பிரதமர் துறையில்தான். 

ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் மீண்டும் செயல்பட வேண்டும். மித்ரா பிரதமரின் நேரடி பார்வையில் செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு சேர வேண்டியவை முறையாக வந்து சேரும் என டத்தோஸ்ரீ தனேந்திரன் தெரிவித்தார்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News