loader
வெள்ளப் பேரிடரால் வெ.1 பில்லியன் இழப்பு! -துணை பிரதமர்

வெள்ளப் பேரிடரால் வெ.1 பில்லியன் இழப்பு! -துணை பிரதமர்

கோலாலம்பூர்,மார்ச் 18-

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர்களால் ஏற்பட்ட மொத்த இழப்பு வெ.1 பில்லியனுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (NADMA) பேரழிவின் விளைவாக ஏற்பட்ட சேதத்தின் மதிப்பை அளவிட்டு வருகிறது. பொதுப்பணித் துறையால் சீரமைக்கப்படும் மத்திய சாலைகள் மற்றும் KKDW ஆல் கிராமப்புற சாலைகள் போன்ற உள்கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளவை இதில் அடங்கும்.

அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட வீடுகளை சரிசெய்வதற்கும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கும் NADMA ஆல் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள உதவித் தொகையும் இதில் அடங்கும் என அவர் சொன்னார்.

இருந்தபோதும், கடந்த ஆண்டு வெள்ளத்தின்போது சில மாநிலங்களில் உதவிகள் சீராகவும் சமமாகவும் வழங்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் காரணமாக உதவி பெற வேண்டிய நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படாது வேதனை அளிப்பதாகவும் இதனை நாம் தவிர்க்க வேண்டும் என அவர் சொன்னார்.

0 Comments

leave a reply

Recent News