loader
நாங்கள் ஓட்டு போட்டு ஆதரவளித்தது எம்பிகளை, ஆலோசனை நிறுவனத்தை அல்ல!  மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட வேண்டும்!

நாங்கள் ஓட்டு போட்டு ஆதரவளித்தது எம்பிகளை, ஆலோசனை நிறுவனத்தை அல்ல! மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட வேண்டும்!

கோலாலம்பூர், மார்ச் 18-

இந்நாட்டிலுள்ள இந்தியர்களின் நிலைமை அறிந்து பேசக் கூடியவர்கள் யார் என்றால், நாங்கள் வாக்களித்து இன்று எம்பிகளாக உள்ள இந்திய தலைவர்கள்தான்.  அவர்களுக்கு புரியாதது ஆலோசனை நிறுவனத்திற்கு புரிந்துவிடுமா?

மித்ராவை அரசாங்கத்திலுள்ள இந்திய தலைவர் குழு அமைத்து அதனை வழிநடத்த வேண்டும். அதை விடுத்து ஆலோசனை நிறுவனம் அல்ல என இன்று நாடாளுமன்றத்தின் வெளியே கூடிய அரசு சாரா இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

மித்ரா எனப்படும் இந்திய உருமாற்ற பிரிவு ஒரு துறையிலிருந்து மற்றொரு பிரிவுக்கு பந்தாடப்படுவது வழக்கமாகிவிட்டது. தற்போது மித்ரா ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் உள்ளது. அதன் செயல்பாடுகள் குறித்து அந்த துறையின் அமைச்சரிடம் நாடாளுமன்றத்தில் கேட்டபோது அதில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் அதன் செயல்பாடுகள் என்னவென்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரதமரால் ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நபர் இப்படி கூறுவதில் நியாயமில்லை. இந்தியர்கள் உறுமாற்றத்தில் அக்கரை இல்லாத அவரின் அமைச்சின் கீழ் மித்ரா செயல்படக் கூடாது. மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டும் என அரசு சாரா இயக்கத்தின் பிரதிநிதி தயாளன் தெரிவித்தார்.

ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் இருந்து மித்ரா வெளியாக்கப்பட்டு பிரதமர் துறையின் கீழ் செயல்பட வேண்டுமென அரசு சாரா இந்திய அமைப்புகள் கோரி மகஜர் ஒன்றை பிரதமரின் அதிகாரி சண்முகத்திடம் வழங்கினர்.

சம்பந்தப்பட்ட ஆலோசனை நிறுவனம் இதற்கு முன்னர் இந்தியர்களுக்காக மை ஹெட்டோம், மை துக்கார் ஆகிய இரு திட்டங்களை முன்னெடுத்து தோல்விக் கண்டது. மீண்டும் அதே ஆலோசனை நிறுவனம் எதற்கு இந்தியர் உறுமாற்ற பிரிவின் ஆலோசனை நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என தயாளன் தெரிவித்தார்.

மேலும் மித்ரா நடவடிக்கை குழுவின் தலைவராக பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை பிரதமர் நியமித்தார். ஆனால் ஒற்றுமை துறை அமைச்சில் அந்த நியமனம் இன்னுமும் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாக தயாளன் தெரிவித்தார்.

மித்ரா தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. மித்ராவின் செயல்பாட்டை பற்றி  விளக்கம் கேட்டதற்கு இந்திய எம்பிகள் எங்களின் ஆலோசனை நிறுவனத்துடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி ஒற்றுமைத் துறை அமைச்சர் கூறியது ஒட்டுமொத்த இந்திய சமுயாத்தையும் பாதித்துள்ளது என டிரா மலேசியா அமைப்பின் தலைவர் சரவணன் தெரிவித்தார்.

இப்படி இந்தியர்களின் தேவைகளை புரிந்து கொள்ளாத அமைச்சரின் கீழ் மித்ரா செயல்பட்டால் அதனால் எந்த நன்மையும் நடக்க போவதில்லை. ஆகையால் மித்ரா பிரதமர் துறையின் கீழ் கொண்டுச் செல்லப்பட வேண்டுமென நாடாளுமன்ற வெளியில் கூடியிருந்தவர்கள் ஒருமித்த குரலுடன் தெரிவித்தனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்

படம்: காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News