loader
MH370 விமானம் தேடுதலில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்! -டத்தோஸ்ரீ அன்வார்

MH370 விமானம் தேடுதலில் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்! -டத்தோஸ்ரீ அன்வார்

ஹம்பேர்க், மார்ச் 16-

நவீன ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று MH370 விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக ஜெர்மன் ஊடகம் ஒன்றும் வெளியிட்ட செய்திக்கு, விமானத்தை தேடுதல் நடவடிக்கை குறித்து அதிக நம்பிக்கை வைத்துவிட வேண்டாம் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி 239 பயணிகளை கோலாலம்பூரிலிருந்து பெர்ஜிங்கிற்கு ஏற்றிச் சென்ற MH370 விமானம் செல்லும் வழியில் காணாமல்போனது. இந்த விமானத்தில் சுமார் 150 சீன பிரஜைகளும் 50 மலேசியர்களும் பயணித்தனர். இந்த விமானம் காணாமல் போன சம்பவம் உலகத்தையே உலுக்கியது.

இச்சம்பவம் நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிய நிலையில் புதிய நிறுவனம் ஒன்று அந்த விமானத்தை தேடும் பணியை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேடும் நடவடிக்கைக்கான முடிவு இன்னும் இரு வாரங்களில் எடுக்கப்படும். ஆகையால் விமானத்துடன் காணமல்போனவரிகளின் குடும்பத்தினர் இந்த தேடல் நடவடிக்கை மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம் என அவர் சொன்னார்.

மக்களிடம் பொய்யான் வாக்குறுதியை நான் அளிக்க விருமபவில்லை. இரும்தபோதும் காணாமல் போனவர்களை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும் என்ற முயற்சியை அரசு கைவிடவில்லை என்பது மட்டும் உறுதி என ஜெர்மனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் அங்குள்ள ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தேடல் நடவடிக்கைக்கு அதிகமான பணம் செலுத்தப்பட்டாலும் கூட  தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News