loader
தலைநகரிலுள்ள ஆறுகளில் குவிந்து கிடக்கும் பண்டாராயா மீன்கள்!

தலைநகரிலுள்ள ஆறுகளில் குவிந்து கிடக்கும் பண்டாராயா மீன்கள்!

கோலாலம்பூர், மார்ச் 16-

கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆறுகளில் இப்போது டோம்போட் எனும் பண்டாராயா மீன்களின் ஆதிக்கம் அதிகரிப்பது ஒரு முக்கியமான அச்சுறுத்தலாகக் கருதப்பட வேண்டும், ஏனெனில் இது உள்ளூர் மீன்களின் அழிவை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் வடிகால் சுற்றுச்சூழல் அமைப்பையும் சேதப்படுத்துகிறது.

பெரும்பாலான ஆறுகள் புலம்பெயர்ந்த மீன் இனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மீன்களைக் கண்டுபிடிப்பது கடினமாகி வருகிறது. இதனால் உள்ளூர் மீன்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என நகர மீன்பிடி சமூகத்தினர் புகார் செய்துள்ளனர்.

குறிப்பாக தலைநகரில் உள்ள பல ஆறுகளில் இந்த Pterygoplichthys எனப்படும் மீன் இனம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மீன்கள் மற்ற உள்ளூர் இன மீன்களின் முட்டைகளை சாப்பிடுவதன் விளைவால் மற்ற மீன்களின் இனவிருத்தி பாதிக்கப்படுகிறது என நகர மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்த முகமட்  ஹஜிக் என்பவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தரப்பு வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டதில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரைச் சுற்றியுள்ள ஆறுகளில் இருந்து 3,200 க்கும் மேற்பட்ட நகர மீன்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன என அவர் சொன்னார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில், நிலைமை மிகவும் சிக்கலாகதாக உள்ளது, இதற்கும் இங்கு குடியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம். 

தலைநகரில் வசிப்பவர்கள், பலருக்கு அலகு மீன்களைப் பாதுகாப்பதில் ஒரு பொழுதுபோக்கு உள்ளது, குறிப்பாக மீன் தொட்டிகளை சுத்தமாக பாதுகாப்பதில் புலம்பெயர்ந்த மீன்களில் ஒன்று இந்த பண்டாராயா மீன் ஆகும். 

 ஏனெனில் அது மீன் வளர்ப்பு தொட்டிகளில்  இருக்கும் கழிவுகள் மற்றும் மீன் உணவின் எச்சங்களைச் சாப்பிட்டு தொட்டிகளை சுத்தம் செய்துவிடும். ஆகவே அதிகமானோர் மீன் தொட்டிகளில் இந்த மீனை வளர்த்து வருகின்றனர். மீன் பெரிதாக ஆகியதும் அதனை ஆற்றில் அவர்கள் விடுவதால்தான் இந்த மீன் தலைநகரில் உள்ள ஆற்றில் பெறுகி வருவதாக அவர் தெரிவித்தார்.

-காளிதாசன் இளங்கோவன்

0 Comments

leave a reply

Recent News