loader
குடியுரிமை சட்டத்திருத்தம்: முறையான ஆய்வு தேவை! -டிரா மலேசியா வலியுறுத்து

குடியுரிமை சட்டத்திருத்தம்: முறையான ஆய்வு தேவை! -டிரா மலேசியா வலியுறுத்து

கோலாலம்பூர், மார்ச் 14-

டிரா மலேசியா தொடர்ந்து கூறி வருவதை போலவே குடியுரிமை சமூக அமைப்புகள், வழக்கறிஞர் மன்றம், மலேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் குடியுரிமை சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை முறையான ஆய்வுக்கு உட்படுத்தாமல் அமலாக்ககூடாது என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். 

ஆயினும், எதையும் கருத்தில் கொள்ளாமல் இம்மாதமே இச்சட்டத் திருத்தத்தை நாடாளுமன்ற பரிந்துரைக்கு அனுப்புவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல்தான் என்கிறார் டிரா மலேசியாவின் தேசிய தலைவர் சரவணன் சின்னப்பன்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சட்ட மாற்றங்களில் மலேசிய பெண் வெளிநாட்டில் வசிக்கும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு தாயின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். அது தவிர மற்ற சட்ட மாற்றங்களை தள்ளி வைக்க வேண்டும். 

ஏற்கனவே பல தலைமுறைகளாக வேரோடியிருக்கும் குடியுரிமை பிரச்சனைகளுக்கு எந்த தீர்வுமில்லை. இந்த புதிய சட்ட திருத்தம் இந்நிலையை மேல் மோசமாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

மேலும், அரசு தரப்பில் இருந்து வெளியிடப்படும் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பொது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிறது. 

கடந்த மார்ச் 7-ஆம் தேதி உள்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் 5,187 15(A) விண்ணப்பங்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரே 15 மார்ச் அன்று வெளியிட்ட அறிக்கையில் 35,000 15(A) விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும் அதில் 98% ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியுரிமை வழங்கப்பட்டதாவும் கூறியுள்ளார். 

இதில் எந்த புள்ளி விவரம் உண்மை என்ற குழப்பம் ஒருபுறமிருக்க. டிரா மலேசியா மூலம் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணபங்களின் முடிவுகளை பதிவு இலாவின் இணையதளத்தில் மூலமும், பதிவு இலாகா அலுவலகங்களில் பரிசிதித்து பார்க்கும் போது; அவ்விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. 

ஏன் இந்த விவரங்கள் பதிவு இலாகா தளத்திலும் அலுவலகங்களிலும் இன்னும் சீரமைக்கப்படவில்லை என சரவணன் கேள்வி எழுப்பினார். 

15(A) என்பது மலேசிய ஆணுக்கு வெளிநாட்டு பெண்களுடன் திருமணமாகாமல் பிறக்கும் குழந்தைகள், குடியுரிமை இல்லாமல் மலேசியர்களால் தத்தெடுக்கப்படும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கும் சட்டபிரிவு. இப்பிரிவின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 21 வயதிற்கும் குறைந்தவர்களே.

உள்துறையமைச்சரின் கூற்றுப்படி நிராகரிக்கப்பட்ட 2 % விண்ணப்பதாரர்கள் மேற்கொண்டு எந்த சட்டபிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்; அவர்களுடைய எதிர்கால நிலை என்ன என்பதையும் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் சரவணன்.

இந்த குடியுரிமை சட்ட மாற்ற நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வினையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஏனெனில் இது ஒட்டு மொத்த மலேசிய சமுதாயத்தையும் பாதிக்க கூடிய மாற்றம் என்றார் அவர்.

0 Comments

leave a reply

Recent News