loader
கழிப்பறையில் மாணவர்கள் உணவு உண்ட சம்பவத்தை மறந்துவிடாதீர்! -ஜசெக அறைகூவல்

கழிப்பறையில் மாணவர்கள் உணவு உண்ட சம்பவத்தை மறந்துவிடாதீர்! -ஜசெக அறைகூவல்

கோலாலம்பூர், மார்ச் 13-

நோன்பு மாதத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் கழிப்பறையில் உணவு உண்ட சம்பவத்தை பாஸ் மறந்துவிடக் கூடாது என ஜசெகவின் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரிட்ஸான் ஜோஹன் நினைவுறுத்தியுள்ளார்.

நோன்பு மாதத்தில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டுமென கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்ததை தொடர்ந்து பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா அதனை குறைக்கூறியுள்ளார்.

நோன்பு இல்லாத மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் உணவு உண்பதை பற்றி அவருக்கு அக்கரை இல்லை என்பது போல் அவரின் கருத்து உள்ளது. கல்வி அமைச்சு ஓர் அறிவிப்பை செய்வதற்கு முன்பு பல கோணங்களில் ஆய்வு செய்துதான் அதனை வெளியிடும்.

கடந்த காலத்தை போல முஸ்லிம் அல்லாத மாணவர்கள் தகாத இடங்களில் உணவு உண்ணும் சம்பவம் நிகழ்ந்து விடக் கூடாது என்ற எண்ணத்திலும் இந்த முடிவை கல்வி அமைச்சு எடுத்திருக்கலாம் என அவர் சொன்னார்.

பல இன மக்கள் வாழும் இந்நாட்டில் அரசு எடுக்கும் முடிவுகள் அனைத்து சமுதாயத்திற்கு  ஆதரவாகவும் நன்மையாகவும் இருத்தல் வேண்டும். பாஸும் பெரிக்காத்தான் நேஷனலுக்கும்  அந்த எண்ணம் இல்லை என்பது இதில் தெளிவாக தெரிகிறது. 

பள்ளி விவகாரங்களில் அரசியல் நடத்துவதை பாஸும் பெரிக்காத்தான் நேஷனலும் நிறுத்திக் கொள்ள வேண்டுமென ஷாரிட்ஸான் ஜோஹன் அறைகூவல் விடுத்தார்.

0 Comments

leave a reply

Recent News