loader
தமிழ்ப்பள்ளி  மாணவர்களுக்கு மலாய் ஆளுமை இல்லையா ? முடிந்தால்  ஆதாரத்தை காட்டுங்கள்!  அம்னோ இளைஞர் தலைவரிடம் டத்தோ நெல்சன் கேள்வி!

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மலாய் ஆளுமை இல்லையா ? முடிந்தால் ஆதாரத்தை காட்டுங்கள்! அம்னோ இளைஞர் தலைவரிடம் டத்தோ நெல்சன் கேள்வி!

கோலாலம்பூர்,மார்ச்.12-

தமிழ்ப்பள்ளிக்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்று மஇகா கல்வி குழுத் தலைவர் டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசியுள்ளார்.

குறிப்பாக தாய் மொழிப் பள்ளிகள் தேசிய ஒருமைபாட்டுக்கு சிக்கலாக உள்ளது. இது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடலை நடத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

என்னை பொருத்த வரையில் அக்மால் சாலே போன்றவர்கள் தான் ஒருமைப்பாட்டுக்கு எதிரானவர்கள்.

தாய் மொழிப் பள்ளிகளில் படிப்பதால் எந்த வகையில் ஒருமைப்பாடு சீர்குலைகிறது.இதை அக்மால் விளக்க முடியுமா என்று டத்தோ நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் தான் தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுகின்றன.

குறிப்பாக தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிரான வழக்குகளில் கூட அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் தீர்க்கமான தீர்ப்பை வழங்கியுள்ளன.

இருந்தாலும் அக்மால் போன்ற நபர்கள் தொடர்ந்து தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுவதை மஇகா வண்மையாக கண்டிக்கிறது. அதுலும் தாய்மொழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மலாய் ஆளுமை இல்லை என்பதற்கு சரியான ஆய்வு உண்டா எத்தனை விழுக்காடு ? ஆய்வு பூர்வமான ஆதாரம் உண்டா என நெல்சன் கேள்வி எழுப்பினார்.

அதே வேளையில் தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறியுள்ளார். இவ்வேளையில் அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று டத்தோ நெல்சன் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News