loader
நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகளை திறக்க சொல்வதா? -பாஸ் கேள்வி

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகளை திறக்க சொல்வதா? -பாஸ் கேள்வி

கோலாலம்பூர், மார்ச் 12-

நோன்பு மாதத்தில் பள்ளி சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்க வேண்டும் என கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்தது அதிகபிரசிங்கித் தனமாக உள்ளதாக பாஸ் கூறுகிறது.

அவரின் இந்த அறிவிப்பு, அவர் நோன்பு மாதத்தை மதிக்காததை காட்டுவதாக பாஸ் கட்சியை சேர்ந்த அகமட் யாஹயா தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பள்ளிக்கு வீட்டிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதனை உண்ணலாம். இதுவே போதுமானதாகும். சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இது முஸ்லிம் மாணவர்கள் முறையான நோன்பை கடைபிடிக்க உதவும் என்றும் முஸ்லிம் அல்லாத மாணவர்கள் நோன்பு எடுக்கும் மாணவர்களை மதித்து நடக்கவும் வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News