loader
நோன்பு காலத்தில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்கும்! -கல்வி அமைச்சு

நோன்பு காலத்தில் பள்ளிகளில் சிற்றுண்டிச்சாலைகள் திறந்திருக்கும்! -கல்வி அமைச்சு

கோலாலம்பூர், மார்ச் 11-

நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சிற்றுண்டிச்சாலைகள் சாதாரண நாட்களை போல் திறந்திருக்கும் என்றும் நோன்பு காலத்தில் அவை மூடப்படாது என்றும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.

இருந்தபோதும் நோன்பின் புணிதத்தை அறிந்து இஸ்லாம் அல்லாத மாணவர்கள் நோன்பு இருக்கும் இஸ்லாம் மாணவர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

நோன்பு காலத்தில் இஸ்லாம் அல்லாத மாணவர்களுக்கு பள்ளிகளில் முறையாக உணவு விநியோகம் செய்யப்படுவதற்காக சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படுகின்றன.

இரு தரப்பினர்களும் புரிதலுடன் செயல்பட வேண்டும். ஆகையால் அனுபவம் நிறைந்த ஆசிரியர்கள் இதனை முறையாக கண்காணிப்பர் என்றார் அவர்.

2024-2025 பள்ளி தவணைக்கான முதல் நாள் பள்ளி இன்று திறக்கப்பட்டத்தை முன்னிட்டு பூச்சோங்கிலுள்ள ஒரு பள்ளிக்கு சிறப்பு வருகையளித்த அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு கூறினார்.

0 Comments

leave a reply

Recent News