loader
காசு இல்லை என்றால்  பிள்ளையை ஏன் படிக்க அனுப்புகிறீர்கள் !

காசு இல்லை என்றால் பிள்ளையை ஏன் படிக்க அனுப்புகிறீர்கள் !

கோலாலம்பூர், மார்ச் -6

ரஸியாவில் 4ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் ஓர் இந்திய மாணவியின் தாய் , தனது மகளின் கல்வி செமஸ்டர் நிதியான 35 ஆயிரம் வெள்ளிக்கு பாக்கி 15 ஆயிரம் வெள்ளி உதவி  கேட்டு  ஓர்  இந்திய துணை அமைச்சரை அணுகிய போது,  அவரின் அதிகாரி கடிதத்தை பெற்றுக்கொண்டு , பிறகு அழைக்கிறேன் என அனுப்பி விட்டார்.

அதன் பின் மேல் விவரம் கேட்க தொடர்பு கொண்ட தாயிடம் அந்த அதிகாரி,  துணை அமைச்சரிடம் மானியம் இல்லை என அதிகாரி சொல்ல , முடிந்த அளவிற்கு உதவி செய்யுங்கள் என தாய் கேட்க , அந்த அதிகாரி உங்களை விட கஷ்ட படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். பணம் இல்லை என்றால் ஏன் பிள்ளையை அங்கு படிக்க அனுப்பீர்கள் என ஏளனமாக பேசியுள்ளார்.

இந்த கேவளமான பேச்சை கேட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அந்த தாய்.

அந்த துணை அமைச்சர், கவனத்திற்கு  இன்று நீங்கள் வகிக்கும் பதவி இந்த பாமர மக்களால் கொடுக்கப்பட்டது. மறந்துவிடாதீர்கள் . உங்களின் உதவியாளராக இருக்கும் அதிகாரிகளுக்கு  கிடைத்த வேலையும் வாய்ப்பும் இந்த மக்கள் கொடுத்தது.

உங்களிடம் உதவி கேட்டு வரும் மக்களிடம் உதவி இல்லை என்பதை கூட நாகரீகமாக சொல்ல முடியவில்லையா உங்களுக்கு.

 ஆனால் கல்விக்கு முக்கியதுவம் கொடுக்கிறோம் என அறிக்கை மட்டும் பெரிய அளவில் விடுவீர்கள்.

காசு இல்லாதவர் பிள்ளைகள் படிக்க கூடாதா? இல்லை காசு இல்லாதவன் படிக்கவே கூடாதா? 
படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு தான் அந்த வலி தெரியும். அந்த துணை அமைச்சர் யார் அவர் அதிகாரி யார் என்ற எல்லா பதிவும் தமிழ் லென்ஸ்சிடம் உள்ளது.

அந்த தாய் ஒரு நடுதர குடும்பத்தை சேர்ந்தவர். எனக்கு அரசியல் வாதிகளின்  பகை வேண்டாம் தம்பி , என் பிள்ளையின் படிப்புக்கு உதவி வேண்டும் என அவர் கேட்டு கொண்டதால் நாங்கள்  பெயரை சொல்லாமல் வைத்துள்ளோம்.

இனி இப்படி ஒரு சம்பவம் மற்றவர்களுக்கு நடந்தால் அல்லது  மீண்டும் அவர்களுக்கு அழைத்து  இது தொடர்பாக திட்டுவது என ஏதாவது ஒரு சம்பவம் நிகழ்ந்தால் பெயர் படம் எல்லாம் வெளியில் அம்பலம் மாகும்.

மக்கள் கொடுத்த வாய்ப்பில் பதவியை அனுபவிக்கும் தரப்பினருக்கு நாவடக்கம் தேவை. உங்களை நம்பி மக்கள் இல்லை மக்களை நம்பி தான் நீங்கள் உள்ளீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இவர்கள் பேசிய இழிவான பேச்சால் அந்த தாய் பொதுவில் வந்து பொது மக்களிடம் உதவி கேட்கவே அச்சம் கொண்டுள்ளார்.

ஆகையால் , பொது மக்களுக்கு தமிழ் லென்ஸ் வைக்கும் வேண்டுகோள்.  இந்த தாயின் மகளின் கல்விக்கு உதவ நினைக்கும் பொது மக்கள் தமிழ் லென்ஸ் ஊடகத்தை நாடினால் நாங்கள் அந்த தாயின் தொலைபேசி எண் விவரத்தை உங்களுக்கு கொடுப்போம்.

ஒரு மாணவியின் கல்விக்கு உதவுங்கள் மக்களே !

செய்தி : வெற்றி விக்டர்

அந்த தாயின் மேல் விவரம் பெற  தமிழ் லென்ஸ் ஊடகத்தை  அணுகவும்.

014-3237321
0102262290

0 Comments

leave a reply

Recent News