loader
எதிர்க்கட்சி எம்பிகளுக்கு மானியம் இல்லை!   நியாயமற்ற செயல்! -அடி அவாங்

எதிர்க்கட்சி எம்பிகளுக்கு மானியம் இல்லை! நியாயமற்ற செயல்! -அடி அவாங்

கோலாலம்பூர், மார்ச் 6-

கட்சிகள் பார்க்காமல் அனைத்து எம்பிகளுக்கும் மானியத்தை அரசு வழங்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தேர்தலின் வழி எம்பிகள் மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். அப்படி இருக்கையில் மக்களால் தேர்வு செய்யப்படுபவர்கள் அவர்களின் சேவையை தொடர மானியம் முறையாக வழங்கப்பட வேண்டும் என பெரிக்காத்தான் நேஷனல் மாராங் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ அப்துல் அடி அவாங் தெரிவித்தார்.

அரசு மானியம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டும். இதில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் யார் எதிர்க்கட்சியாக உள்ளார்கள் என்ற பாகுபாடு கூடாது. 

வரி வசூலிக்கும்போது நாட்டு மக்கள் அனைவரிடம்தான் வசூலிக்கப்படுகிறது..யார் ஆட்சியை பிடித்த கட்சியை ஆதரிக்கிறார்களோ அவர்களிடமிருந்து மட்டும் வசூலிக்கப்படுவதில்லை. வரி வசூலுக்கு மட்டும் இந்த நிலை இருக்கும்போது மானியம் ஒதுக்கீட்டிலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேற்கு கடற்கரை மாநிலங்களில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுதந்திரம் பெற்றிருந்தாலும் கூட கிழக்கு மலேசியா இன்னும் பின்தங்கியே உள்ளது. திரெங்கானு மற்றும் கிளந்தானுக்கு ராயல்டி இல்லை, மற்ற மாநிலங்களில் ராயல்டி பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அரசு மானியம் வழங்கப்படாததை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார். அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மானியம் நேரடியாக வழங்கப்படாமல் நேரடியாக மக்களிடம் வழங்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

0 Comments

leave a reply

Recent News