loader
பேராக் ஈப்போ கே.டி.எம் ரயில் நிலைய பதாகையில் தாய்லாந்து மொழிக்குக் கொடுத்த முன்னுரிமை தமிழுக்கு இல்லை!

பேராக் ஈப்போ கே.டி.எம் ரயில் நிலைய பதாகையில் தாய்லாந்து மொழிக்குக் கொடுத்த முன்னுரிமை தமிழுக்கு இல்லை!

ஈப்போ, மார்ச் 6-
அதிகமான இந்தியர்கள் வாழும் பேராக் மாநிலத்தில் பல பழமை வாய்ந்த இடங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது வரலாறு.

ஆனால், சமீபத்தில் தெலுக் இந்தான்  சந்தையின்  நுழைவு வாசலில் தமிழ் இல்லை என்ற சர்ச்சை கிளம்பியது. பல எதிர்ப்புகள் வந்தவுடன் தமிழ் எழுத்து அங்கு மீண்டும் வைக்கப்பட்டது. இந்த செய்தியை தமிழ் லென்ஸ் வெளியிட்டது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

இப்போது ஈப்போ கே.டி.எம் ரயில்  நிலைய பதாகையில் பேராக்கிற்கு வருகை தாருங்கள் என்ற பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையில் மலாய், சீன, ஜாவி, மற்றும் தாய்லாந்து மொழியும் இடம்பெற்றுள்ளன. ஆனால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாட்டு தைலாந்து மொழிக்கு கொடுக்கும் மரியாதையை அந்த மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்குக் கொடுக்க தவறியது யார் குற்றம்?

பேராக் மாநில ஆட்சி குழு உறுப்பினர் சிவநேசனுக்கு இதை கவனிக்க நேரம் இல்லையா என  சமூக வலைத்தளத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

எது எதுக்கோ அவசரக் கூட்டம் போடும் சிவநேசன், தான் ஆட்சி குழு உறுப்பினராக இருக்கும் பேராக் மாநிலத்தில் ஒரு பொது போக்குவரத்து இடத்தில்  தமிழ் மொழி புறக்கனிக்கப்பட்டதை எதிர்த்து குரல் கொடுக்க திரானி உண்டா ?  இதற்கு அவசரக் கூட்டம் போடுவாரா?

தமிழ் மொழியை வாழவைப்போம் என அறிக்கை விடுவது மட்டும் தமிழ் உணர்வு  அல்ல. மாறாக தமிழ் மொழி பெருமையை நிலை நிறுத்தும் வகையில் குரல் கொடுத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.


செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News