loader
குடி நுழைவுத் தடுப்பு மையங்களில் குழந்தைகள் சித்திரவதையா?

குடி நுழைவுத் தடுப்பு மையங்களில் குழந்தைகள் சித்திரவதையா?

கோலாலம்பூர், மார்ச் 6-

கடந்த செப்டம்பர் மாதம் வரை, மலேசியா முழுவதிலும் உள்ள 20 குடி நுழைவுத் தடுப்பு மையங்களில் மொத்தம் 1,467 அந்நிய நாட்டு குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று வாட்ச் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்ட குழந்தைகள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டு வருவதை நேரில் கண்ட அலி என்ற ஆடவர் அதனை தட்டிக்கேட்க முயன்றபோது அவரும் அங்கு சித்திரவதை செய்யப்படதாக அவர் கூறியுள்ளார்.

44 வயதான அலி, இரவு முழுவதும் தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து வெளியேற முயன்ற போது அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஒன்பது வயது சிறுவன் அதிக ரொட்டி கேட்டதற்காக எப்படி அடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டான் என்ற  கொடூரமான காட்சியை நேரில் கண்ட  அவர் அந்த அனுபவத்தை சர்வதேச மனித உரிமை ஆணையத்திடம் பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

பொதுவாக டேப்போக்கள் என்று அழைக்கப்படும் தடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகள், தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள மூத்தவர்கள் எதிர்கொள்ளும் அதே துஷ்பிரயோகங்களை அடிக்கடி எதிர்கொள்கின்றனர். மருத்துவ உதவி மறுப்பு, போதிய உணவு மற்றும் தவறான சிகிச்சை உட்பட பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி தடுப்பு காவலில் இருக்கும் மொத்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு பகுதியினர் துணையின்றி அல்லது அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிந்து, சில சமயங்களில் தனியாக (அவர்கள் பிறந்த நாட்டிற்கு) திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்குப் பின்பு அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கப்படாமல் அவுதிபடுவதாக கூறப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு தேவையான பால் மாவு மற்றும் பெம்பஸ் போன்ற அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பெண்கள் டெப்போவில் பிரசவித்து, புதிதாகப் பிறந்த குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.

மலேசிய அரசாங்கம் குழந்தைகளை குடியேற்றக் காவலில் வைத்திருப்பது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், 

கைது செய்யப்படும் சிறார்கள் மற்றும் குடும்பத்தினர்களின் பாதிகாப்பு கறுதி தடுப்பு காவல் சட்டத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என வாட்ச் மனித உரிமை ஆணையம் புத்ரா ஜெயாவை வலியுறுத்தியது.

0 Comments

leave a reply

Recent News