loader
ஊடக அட்டை ஊடகவியலாளருக்கான லைசென்ஸ் கிடையாது! -ஃபாமி பட்ஸில்

ஊடக அட்டை ஊடகவியலாளருக்கான லைசென்ஸ் கிடையாது! -ஃபாமி பட்ஸில்

கோலாலம்பூர், மார்ச் 6-

ஊடகவியலாளர்கள் தங்களின் கடமையை செய்வதற்கான லைசென்சாக ஊடக அட்டை வழங்கப்படவில்லை. மாறாக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்து கொள்வதற்கான சிறப்பு அட்டையாகவே தகவல் துறை அதனை வெளியிட்டுள்ளதாக தொடர் துறை அமைச்சர் ஃபாமி பட்ஸில் தெரிவித்தார்.

மருத்துவ துறைக்கு தேவைப்படும் லைசன்ஸ் போல் இது இல்லை. அதேபோல் வழக்கறிஞர்கள், கட்டட வடிவமைப்பாளர் போன்றவர்கள் அத்துறைகளில் கடமையாற்றுவதற்கு தேவைப்படும் லைசென்ஸ் போன்ற இது இல்லை என்றார் அவர்.

ஊடக அட்டைக்கான 2 ஆண்டு செல்லுபடி காலம் மற்றும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது அல்ல. ஊடக அட்டை என்பது ஊடகவியலாளர்களுக்கு தேவையான உரிமம் அல்ல, (அது இல்லாதது) செய்தியாளர்கள் செய்திகளை வெளியிடுவதைத் தடை செய்யாது, எனவே அது ஊடக சுதந்திரத்தைத் தடுக்காது என்றார் அவர்.

0 Comments

leave a reply

Recent News