loader
உள்நாட்டு அரிசி எங்கே போகிறது?' பிரதமரிடம் மொகிதீன் கேள்வி!

உள்நாட்டு அரிசி எங்கே போகிறது?' பிரதமரிடம் மொகிதீன் கேள்வி!

கோலாலம்பூர், மார்ச் 5-

உள்நாட்டு அரிசி விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும். மக்கள் எதிர்நோக்கும் அரிசித் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் மொகிதீன் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

நான் விவசாயம் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரிசி தொடர்பான பிரச்சினைகளை நான் சமாளித்து வந்தேன், சந்தையில் அரிசி இல்லை என்ற பிரச்சினையோ அல்லது அரிசியின் விலை அதிகரிப்பையோ நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விட உள்ளூர் அரிசி தற்பொழுது சந்தையில் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாக நடக்கிறது. உள்நாட்டு அரிசி விற்பணை சந்தையில் குறைவாக உள்ளது. உள்ளூர் அரிசி எல்லாம் எங்கே போகிறது? இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

மடானி அரசாங்கத்தில் உணவு விலை மற்றும் பொருளாதாரம் கட்டுப்பாடு இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி வழங்கியிருந்தார். ஆனால் தற்பொழுது சூழ்நிலையில் அரிசி மற்றும் விலையேற்றம் தொடர்பாக தமக்கு புகார்கள் கிடைத்து வருவதாக அவர் சொன்னார்.

இதற்கிடையில், வாழ்க்கைச் செலவு மற்றும் சவாலான பொருளாதாரம் ஆகியவை இந்த நேரத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என மொகிதீன் மேற்கோள் காட்டினார்.

மேலும் ரிங்கிட்டின் மதிப்பு  குறைந்துக்கொண்டே போகிறது. அதாவது மலேசியர்களுக்கே ரிங்கிட்டின் மீது நம்பிக்கை இல்லை.

அவர்கள் ரிங்கிட்டை சேமிக்க விரும்பவில்லை. ஏனென்றால் மதிப்பு தொடர்ந்து குறையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் வெளிநாட்டு நாணயத்தை சேமிக்க எண்ணம் கொள்கிறார்கள்.

ஆகவே மடானி அரசாங்கம் உடனடியாக இப்பிரச்சனை தொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

0 Comments

leave a reply

Recent News