loader
மக்களின் பிரச்சனைகளை களைய அரசு தயாராக இருந்தால்  மை பிபிபி கட்சி ஆதரவு வழங்கும்! -டத்தோ லோகபாலா

மக்களின் பிரச்சனைகளை களைய அரசு தயாராக இருந்தால் மை பிபிபி கட்சி ஆதரவு வழங்கும்! -டத்தோ லோகபாலா

கோலாலம்பூர், மார்ச்.4-

மக்களின் பொருளாதார சுமையைக் குறைக்கும் முயற்ச்சியில் ஒற்றுமை அரசாங்கம் செயல்பட்டால் நிச்சயம் மைபிபிபி கட்சி ஆதரவாக இருக்கும் என அதன் தலைவர் டத்தோ லோகபாலா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கோவிட்-19 தொற்று பாதிப்பை அடுத்து இன்னும் தொடர்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 

அதில் குறிப்பாக தற்பொழுது ஏற்ப்பட்டுள்ள பொருட்கள் விலைவாசி ஏற்றத்தாழ் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கை செலவீனங்களை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்வகையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மை பிபிபி கட்சி சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன் வைத்தது. முக்கியமாக உணவு மற்றும் பொருட்கள் விலையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கட்டட வாடகையை அரசு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி முன் வைத்துள்ளது. 

கட்டட வாடகை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகமாக வசூலிக்கப்படுவதால் வியாபாரிகள் உணவு மற்றும் பொருட்களின் விளையை ஏற்றம் செய்கின்றனர். கட்ட வாடகை விலையை கட்டுப்படுத்துவதால் உணவு மற்றும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியும் என தாம் நம்புவதாக அவர் சொன்னார்.

நேற்று மை பிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற உட்சமன்ற கூட்டத்தில் கட்சியின் நலன் கருதி பல புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவற்றில் கட்சியின் சட்ட திட்டங்களில் புதிய மாற்றம் செய்யப்பட்டதோடு மை பிபிபி கட்சியின் சின்னத்தை மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என டத்தோ லோக பாலா தெரிவித்தார்.

தொடர்ந்து இனி புதிய பொலிவுடன் மை பிபிபி கட்சி மக்களின் நலனுக்காக செயல்படும் என அவர் உறுதியளித்தார்.

0 Comments

leave a reply

Recent News