loader
பரவும் தகவல் உண்மையா ? கடிதத்திற்கு இன்னும்  பதில் இல்லை ஏன் ?

பரவும் தகவல் உண்மையா ? கடிதத்திற்கு இன்னும் பதில் இல்லை ஏன் ?

சிலாங்கூர்  பிப்ரவரி-29

அண்மையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்புக்குத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தகவலை சொன்னது சிலாங்கூர் மாநில  கல்வி இலாகா என சொல்லப்பட்டாதாக   தகவல் பரவியாதாகவும் ,
அந்த தகவல் தொடர்ச்சியாக  சிலாங்கூரில் உள்ள் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் பரவியதாக  சிலாங்கூர் தமிழ் சங்கத்  தலைவர் எல். சேகரன் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் இதற்கான விளக்கம் கேட்டு சிம்பாங் லீமா   தமிழ்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் ஒரு நடவடிக்கை குழு  மணிவண்ணன் தலைமையில் உருவாக்கப்பட்டு கடிதம் ஒன்றை  தயார் செய்து விளக்கம் கேட்டு சிலாங்கூர்  கல்வி இலாகா, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, கல்வி அமைச்சு , கல்வி அமைச்சர் , துணை கல்வி அமைச்சருக்கு கடிதம் ஒன்றை கடந்த பிப்ரவரி 7 முதல் 9 வரை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்திற்கு எந்த ஒரு பதிலும் இல்லாத பட்சத்தில் இந்த நிலவரம் உண்மையா ? என சிலாங்கூர் கல்வி இலாகா மற்றும் கல்வி அமைச்சு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என  அவர்கள் செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினர்.

இந்த செய்தியாளர் சந்திப்பிற்கு வருகை அளித்த மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார்,
மாணவர்கள் விவகாரத்தில்  குழப்பம் இருக்க கூடாது; அமைச்சு உடனடி விளக்கம் கொடுக்க வேண்டும்; கணிணி வகுப்பு தடை இல்லாமல் நடக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதே வேளையில் சிலாங்கூர் தமிழ் சங்கத் தலைவர் எல். சேகரன் பேசுகையில் அமைச்சு மௌனமாக இருக்காமல்  உடனடியாக விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.


செய்தி : வெற்றி விக்டர்

0 Comments

leave a reply

Recent News