loader
சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்து வெ.3,753 பறிமுதல்:  10 போலீசாரிடம் விசாரணை!

சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்து வெ.3,753 பறிமுதல்: 10 போலீசாரிடம் விசாரணை!

பெட்டாலிங் ஜெயா, பிப்.5-

மதுபோதையில் காரை செலுத்தும் வாகனமோட்டிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளிடமிருந்தும் அவர்களின் காரிலிருந்து வெ.3,753 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் பெட்டாலிங் ஜெயா போலீஸ் படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன் உட்பட 10 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் சாலை தடுப்புச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் அதிகாலை 2.30 மணியளவில் புக்கிட் அமான் உயர்நெறி கண்காணிப்பு பிரிவினர் அங்கு அதிரடியாக வந்திறங்கினர். அங்கிருந்த அதிகாரிகளை விசாரித்ததுடன் அதிகாரி ஒருவரிடமிருந்து வெ.3,313 ரொக்கத்தையும் போலீஸ் வாகனத்திலிருந்து வெ.440 ரொக்கத்தையும் சிறப்புப் படையினர் கைப்பற்றினர்.

இந்த பணம் கையூட்டாக பெறப்பட்டதா என்பதை கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ உசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News