loader
கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு!

கென்யாவில் கொடூரம்; தோண்ட, தோண்ட குழந்தைகள் உள்பட 201 உடல்கள் மீட்பு!

நைரோபி, மே 16-
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இதனையொட்டிய ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என கடந்த மாதம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர்.

இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட தேடலில் இதுவரை 47 பேர் உயிரிழந்து உள்ளனர் என துப்பறியும் அதிகாரி சார்லஸ் கமாவ் கூறினார்.

சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி அந்த சீடர்களிடம் கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்.

சீடர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. இதில் பல அதிர்ச்சிகர விசயங்கள் தெரிய வந்து உள்ளன.

0 Comments

leave a reply

Recent News