loader
அதி தீவிரமடைந்த மோக்கா புயல்.. தமிழ்நாட்டில்  அடைமழை பெய்யும்!

அதி தீவிரமடைந்த மோக்கா புயல்.. தமிழ்நாட்டில் அடைமழை பெய்யும்!

சென்னை, மே.12-வ

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்டுத்துமா என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.அத்துடன் எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.

பின்னர் வங்கதேசம், மியான்மர் அருகே போர்ட் பிளேருக்கு 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டது.. இதுகுறித்து நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசும் இப்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள,சிறப்பு எச்சரிக்கையின்படி வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத் துறை கமிஷனருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள், மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News