loader
பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்து: 27 பேர் உயிரிழப்பு!

பெரு நாட்டில் தங்கச்சுரங்கம் தீப்பிடித்து: 27 பேர் உயிரிழப்பு!

லிமா, மே 9-

தென் அமெரிக்க நாடான பெரு தங்கம் உற்பத்தி செய்வதில் உலகளவில் முதன்மை வகிக்கிறது. அங்கு ஏராளமான தங்க சுரங்கங்கள் காணப்படுகின்றன. அதே சமயம் சுரங்கம் தொடர்பான விபத்துகள் அதிகம் நிகழும் நாடுகளுள் ஒன்றாகவும் திகழ்கிறது.

லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் உள்ள தங்க சுரங்கத்தில் வழக்கம்போல் தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்தின் மேற்பகுதியில் இருந்து சுமார் 300 அடி ஆழத்துக்கு அடியில் தோண்டி கொண்டிருந்தபோது அங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ வேகமாக சுரங்கம் முழுவதும் பரவியதால் தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் சுரங்கத்தை சுற்றிலும் புகை மூட்டம் சூழ்ந்ததால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

0 Comments

leave a reply

Recent News