loader
அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்படாது!

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்படாது!

வாஷிங்டன், மே.06-

அமெரிக்காவில் கொரோனா பரவலின்போது, தொற்று ஏற்பட்டவர்கள் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டின் எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. அவர்களை உடனடியாக திருப்பி அனுப்பும்படி எல்லை படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

டிரம்ப் அரசில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பைடன் அரசாங்கம் வந்த பின்னர் இந்த விதிகளில் வருகிற 11 ஆம் தேதிக்கு பின்னர், தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க-மெக்சிகோ எல்லை திறக்கப்பட்டால், எண்ணற்ற புலம்பெயர்வோர் அமெரிக்காவில் நுழைய கூடிய சாத்தியம் உள்ளது. இதனால், நியூ மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்படும்.

இந்த விவகாரம் பைடன் நிர்வாகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்தவர்கள் கூறும்போது, எல்லை வழியே ஏற்கனவே லத்தீன் அமெரிக்கர்கள் அலைகடல் போன்று திரண்டு வருகின்றனர் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

0 Comments

leave a reply

Recent News