loader
மலேசியா, இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் 2 வகையான உடனடி மீ-க்களுக்கு தைவானில் தடை!

மலேசியா, இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் 2 வகையான உடனடி மீ-க்களுக்கு தைவானில் தடை!

தைவான், ஏப்.25-

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில்   தயாரிக்கப்படும்  இரண்டு வகையான உடனடி மீ வகையில்  புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக நேற்று தைபேய் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தைவான் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் உடனடி மீ- ,க்களில் சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட இரு உடனடி 'மீ' வகைகளில் புற்றுநோயை உண்டாக்கும்  பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு உடனடி 'மீ'க்களையும் உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அந்த மீ வகைகளை தாய்வானில் இறக்குமதி செய்யவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில் அவ்விரு உடனடி 'மீ'க்களையும் இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

0 Comments

leave a reply

Recent News