loader
NCERT பாடப் புத்தகங்களில் இருந்து காந்தி, ஆர்எஸ்எஸ் தடை, மத ஒற்றுமை  குஜராத் கலவரம் தகவல்கள் நீக்கம்!

NCERT பாடப் புத்தகங்களில் இருந்து காந்தி, ஆர்எஸ்எஸ் தடை, மத ஒற்றுமை குஜராத் கலவரம் தகவல்கள் நீக்கம்!

புது டெல்லி ஏப்ரல் - 7

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் NCERT  12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து காந்தி, ஹிந்து-இஸ்லாம் ஒற்றுமை, ஆர்எஸ்எஸ் மீதான தடை, முகலாயளர்கள் குறித்த பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து "காந்தியின் மரணம் நாட்டில் நிலவிய வகுப்புவாத சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது', "ஹிந்து-இஸ்லாம் ஒற்றுமைக்கான காந்தியின் முயற்சிகள் ஹிந்து தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டன', "ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சில காலங்களுக்குத் தடைசெய்யப்பட்டன' உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

2002இல் நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த பகுதியும் 11-ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

முகலாயர்கள், அவரசநிலை, பனிப்போர், நக்ஸல் இயக்கம் குறித்த பகுதிகளிலும் பிற பாடப்புத்தங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஒரே பாடப்பகுதிகள் மீண்டும் இடம்பெற்றிப்பது, பொருத்தமற்ற தகவல்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக அவை கைவிடப்பட்டதாக NCERT  தெரிவித்தது.

எவ்வித அறிப்புமின்றி மகாத்மா காந்தியின் படுகொலை உள்ளிட்ட பகுதிகள் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "பாஜகவால் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஆனால், நாட்டின் வரலாற்றை மாற்ற முடியாது. இது பாஜக-ஆர்எஸ்எஸ் இணைந்து மேற்கொண்ட முயற்சி. அவர்கள் விரும்பும் அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், நாட்டின் வரலாற்றை அழிக்க முடியாது' என்றார்.

நீக்கப்பட்ட பாடப்பகுதிகளை குறிப்பிட்டு எம்.பி.  கபில் சிபல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் நவீன இந்திய வரலாறு 2014யிலிருந்து தொடங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments

leave a reply

Recent News