கோலாலம்பூர் ஜூலை 26-
மலேசிய பக்தி திரைப்படமான 'காளிமுனி தரிசனம்' திரைப்படம், தற்போது மலேசியாவில் மட்டும் அல்லாது சிங்கப்பூரிலும் திரையிடப்பட்டு, வெளியீடு கண்ட முதல் வாரத்திலேயே 2 லட்சம் வெள்ளி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
டி.தி.எஸ். இந்திரன் இயக்கத்தில், அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில், மலேசிய முன்னணி கலைஞர்கள் பலர் நடித்து வெளிவந்துள்ள இத்திரைப்படம், தற்போது 37 திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஆகால லோகத்திலே' என்ற பாடல், மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தில் அம்மன் வேடத்தில் நடித்த ரத்னா கௌரி அப்பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.
தற்போது டிக் டோக் செயலியில் பலரும் அவரது பாணியில் பல வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
பல போராட்டங்கள், தடங்கல்களைக் கடந்து வெளி வந்துள்ள 'காளிமுனி தரிசனம்' தொடர்ந்து பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது!
விளம்பரம்:
0 Comments