கோலாலம்பூர், ஜூன், 18: நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மலேசியாவில் வேலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரின் பேட்டி.
தமிழகத்தின் தனியார் ஆன்லைன் ஊடகம் ஒன்றில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ நிகழ்ச்சியில் மலேசியாவில் உணவகத்தில் வேலை செய்த போது, அந்த உணவக முதலாளியால் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அதில் வேலாயுதம் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து மனிதவள அமைச்சும், காவல்துறையும் சம்பந்தப்பட்ட உணவகத்திற்குச் சென்று விசாரணை செய்திருப்பதோடு, மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இந்நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நேரலையில் இன்று பேசுகிறார்.
ஆன்லைன் வழியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்திய உணவகத்தில்
பாதிக்கப்பட்டதாகக் கூறும் அந்நியத் தொழிலாளி வேலாயுதமும் பங்கேற்கிறார்.
உண்மையில் நடந்தது என்ன? என்பதை இரு தரப்பும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
மலேசிய நேரப்படி இன்று இரவு 8.30 மணி (இந்திய நேரம் மாலை 6.00 மணி) நிகழ்ச்சி தொடங்குகிறது!
நிகழ்ச்சிக்கான லிங்க்: https://streamyard.com/a55gbzcb6n
0 Comments