loader
சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்!

சிலாங்கூரில் அனைத்து பள்ளிகளும் நாளை முதல் மூடப்படும்!

கோலாலம்பூர், மே 5: சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும், நாளை முதல் மூடப்படும் என, சிலாங்கூர் கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2021 மே 6 -ஆம் தேதி முதல் மே 12-ஆம் தேதி வரை பள்ளிகளை மூட வேண்டுமென, இன்று நடைபெற்ற  சிலாங்கூர் சிறப்பு பாதுகாப்புக் குழு கூட்டத்தில்  பரிந்துரைக்கைப்பட்ட முடிவுக்கு ஏற்ப, கல்வி அமைச்சு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கோவிட் -19 சம்பவங்கள் சிலாங்கூரில் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments

leave a reply

Recent News