loader
‘உனக்காகத்தானே’....  இது தேறாது!

‘உனக்காகத்தானே’.... இது தேறாது!

(வெற்றி விக்டர்)

கிள்ளான் மே 24-

‘இம்மோர்டல் புரடக்சன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய இயக்குனர் எஸ்.பி ஸ்ரீ காந்த் இயக்கத்தில் இரண்டு புதிய கதாநாயகர்கள் அறிமுகம் காண இருக்கும் திரைப்படம் ‘உனக்காகத்தானே’.

மலேசியத் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை  பெரும்பாலான படங்களில் வழக்கமான அதே நட்சத்திரங்கள், அதே டி.வி  - வானொலி நடிகர்கள்தான் முகம் காட்டுகிறார்கள்.  மலேசியத் தமிழ் சினிமா இப்படித்தான் இயங்குமா?  என்ற குரல் எப்போதும் எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்குக் காரணம்  திறமை இருந்தும் அதற்கான களம் அமையாமல், வெளியே காத்திருக்கும் திறமையான கலைஞர்களால் உண்டான ஆதங்கம்தான்.

மூத்த கலைஞர்களும் வாழ வேண்டும். அதே சமையத்தில் புதிய கலைஞர்களும் உருவாக வேண்டும்.  அப்போதுதான் மலேசியத் தமிழ் சினிமா உருப்படும். அந்த வகையில் கடந்த இரு வருடங்களாகப் புதிய முகங்கள் நடிக்கும் படங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அதே சமயம் புதியவர்களை முடக்கவும் அரசியல் நடக்கிறது. இந்த சினிமா உலகம் யாருடைய சொத்தும் கிடையாது. இன்னும் எளிமையாகச் சொன்னால் சினிமா உலகம் சென்ட்ரியான் பெர்ஹாட் கிடையாது.

அந்த வகையில் ‘உனக்காகத்தானே’ திரைப்படதிற்காக  ஆடிஷன் வைத்து புதிய முகங்களைத் தேந்தெடுத்துள்ளனர் படக் குழுவினர்.  கதையின் நாயகர்களையும் ஆடிசன் வைத்துதான் தேர்வு செய்துள்ளனர்.  இதன் வழி புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கும் ‘இம்மோர்ட்டல்’ நிறுவனத்தின் இயக்குனர் கோகிலவாணிக்கும், தயாரிப்புக் குழுவினருக்கும் வாழ்த்துகள் .

சிவசங்கர் , ராஜேந்திரன் என்ற இரு புதுமுகங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து கதையையும் காதாப்பாத்திரத்தையும் நம்பி,  அறிமுக இயக்குனர் எஸ்.பி.ஸ்ரீகாந்த்  ‘உனக்காகத்தானே’ திரைப்படத்தின் வாயிலாக என்னதான் சொல்லபோகிறார்?  என்கிற தேடல் உருவாகியுள்ளது

புதியவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் , படம் தரமாக இருக்குமா? எப்படி சினிமா அனுபவம் இல்லாமல் திரை உலகில் நுழைகிறார்கள்?  போன்ற விமர்சனங்கள் இனி வரும். அதோடு இது தேறாது என்ற வாடிக்கையான வசனமும் இடம்பெறும். அதையும் தாண்டி  இந்தப் புதிய குழுவின்  இணைப்பில் வெளியாகவிருக்கும் ‘உனக்காகத்தானே’ திரைப்படம் மக்கள் மனதைத் தொட்டால், அதுவே மலேசியத் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாதையை உருவாக்கும். திறமையானவர்கள் அறிமுகமாக புதிய களமாகவும் இது அமையும்.

ரசிகர்களுக்கு இப்படி ஒரு திரைப்படம் வரவிருக்கிறது என்பதைக் கொண்டு சேர்க்கவே ‘இது தேறாது’ என்ற தலைப்பில் உங்கள் கவனத்தை இந்தப் புதியவர்கள் பக்கம் திருப்பினோம் . இங்கு நல்லதை  நல்லாச் சொன்னா எஙகப்பா  ரீச் ஆகுது? அதான் தலைப்பில் கொஞ்சம் சர்ச்சையைக் கிளப்பினேன் .

புதிய இயக்குனர், புதிய நாயகர்கள், பிரபலமான நாயகி யாஸ்மின் நடியா இவருக்கு ஜோடியாக இந்த இருவரில் யார்?  என்ற கேள்வியும் உண்டு.

அதோடு  130 கலைஞர்கள், 30 தொழில்நுட்பக்கலைஞர்கள், புதிய நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி, பெரிய பொருள்செலவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்திற்கு, ஜித்திஸ் இசை அமைக்க, தீலீப் வர்மன் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

இப்படி ஒரு மெகா கூட்டணியில் இவ்வாண்டு திரைக்கு வரவிருக்கும் இப்படம்,  புதியவர் என்ற காரணத்தினால் ஒரே வரியில் ‘தேறாது’ என்று யாரும் எண்ணிவிடக்கூடாது என்பதற்காக, இந்தக் குழு யார் என்பதை ரசிகர்கள் அறிந்துகொள்ள, தலைப்பின் வழி உங்கள் பார்வையை இவர்கள் மீது திருப்பி, இந்தப் புதிய கலைஞர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். இத்திரைப்படம்  செப்டம்பரில் திரைகாணவிருக்கிறது.

‘உனக்காகத்தானே’ என்கிற இந்தப் புதிய முயற்சி, புதிய தேடலுக்கு புதிய எதிர்பார்ப்போடு ஆதரவு கொடுக்கக் காத்திருப்போம்!

0 Comments

leave a reply

Recent News