(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் மே- 6
ஷைலா நாயர்- ஷாலினி பாலசுந்தரம் இரண்டு கதாநாயகிகளும் இணைந்து மோதப்போகும் திரைப்படம் 'புலனாய்வு.'
இத்திரைப்படத்தை டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர் தயாரிக்க, ஷாலினி பாலசுந்தரம் மற்றும் சதீஸ் நடராஜன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
சசிதரன், கபில், ஷைலா நாயர், ஷாலினி பாலசுந்தரம், கீர்த்தி நாயர் இன்னும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் தலைப்பு அறிமுக விழா தலைநகரில் நடைபெற்றது . அஜெண்டா சூரியா இயக்குனர் ஜெகா ராவ் தலைமையில் இத்திரைப்படத்தின் தலைப்பு அறிமுகம் செய்யப்பட்டது.
முழுக்க முழுக்கக் குற்றப்புலனாய்வு சம்பந்தமான இத்திரைப்படத்தில், காதலுக்கும் இடமுண்டு. மாறுபட்ட வேடத்தில் ஷைலா நாயர் நடிக்கும் இப்படத்திற்கான திரைக்கதையை, பல சுவாரஸ்யங்களோடு அமைத்துள்ளாராம் ஷாலினி!
0 Comments