loader
கொரோனா: உயிரிழந்தவர்கள் 1,02,687 குணமடைந்தோர் 3,76,109

கொரோனா: உயிரிழந்தவர்கள் 1,02,687 குணமடைந்தோர் 3,76,109

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,97,533 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,02,687 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,76,109 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,037 பேர் இறந்ததால் கொரோனா உயிரிழப்பு அங்கு 18,719 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் முதல் முறையாக ஒரே நாளில் அமெரிக்காவில் இரண்டு ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா உயிரிழப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள அமெரிக்கா தற்போது முதலிடத்தில் உள்ள இத்தாலியை நெருங்கியுள்ளது. இத்தாலியில் 18,849 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்காவில் 18,719 பேர் இறந்துள்ளனர்.

ஸ்பெயினில் 16,081, பிரான்சில் 13,197, பிரிட்டனில் 8,958, ஈரானில் 4,232, சீனாவில் 3,336, ஜெர்மனியில் 2,767, மலேசியாவில் 70, பாகிஸ்தானில் 66, வங்கதேசத்தில் 27, சிங்கப்பூரில் 7, இலங்கையில் 7, சவுதி அரேபியாவில் 47, ஐக்கிய அரபு அமீரகத்தில் 16, கத்தாரில் 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 33,483 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 5,02,049 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 1,58,273, இத்தாலியில் 1,47,577, பிரான்சில் 1,24,869, ஜெர்மனியில் 1,22,171, சீனாவில் 81,907, பிரிட்டனில் 73,758, ஈரானில் 68,192, துருக்கியில் 47,029, பாகிஸ்தானில் 4,695, மலேசியாவில் 4,346, சிங்கப்பூரில் 2,108, வங்கதேசத்தில் 424, இலங்கையில் 190, சவுதி அரேபியாவில் 3,651, ஐக்கிய அரபு அமீரகத்தில் 3,360, கத்தாரில் 2,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News