loader
கொரோனா பலி 59,000  குணமடைந்தோர் 2 லட்சத்துக்கும் மேல்!

கொரோனா பலி 59,000 குணமடைந்தோர் 2 லட்சத்துக்கும் மேல்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உலகம் முழுக்க பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,140 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1,320 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி 7,391 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இத்தாலியில் ஒரே நாளில் 766 பேர் இறந்ததால் கொரோனா உயிரிழப்பு 14,681 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 850 பேர் இறந்ததால் கொரோனா உயிரிழப்பு 11,198 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் இறந்ததால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3,605 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் 6,507, சீனாவில் 3,322, ஈரானில் 3,294, ஜெர்மனியில் 1,275 பேர் கொரோனாவால் இறந்தனர்.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,97,810 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,28,405 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,76,965 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அமெரிக்காவில் ஒரே நாளில் 32,088 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தாலியில் 1,19,827, ஸ்பெயின் 1,19,199, ஜெர்மனி 91,159, சீனாவில் 81,620, பிரான்ஸ் 64,338, ஈரான் 53,183, பிரிட்டன் 38,168, மலேசியா 3,333, பாகிஸ்தான்  2,686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலேசியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 3,333 ஆக உயர்ந்துள்ளது. இதில் இறந்தோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News