loader
கடமையைச் செய்யுங்கள்!   ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது!  _ ஓட்டுப்போட வந்த 100 வயது பாட்டியின் அட்வைஸ்

கடமையைச் செய்யுங்கள்! ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது! _ ஓட்டுப்போட வந்த 100 வயது பாட்டியின் அட்வைஸ்

தஞ்சோங் பியாய் நவம்பர்- 16

பரபரப்பாக நடந்துவரும் தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 45 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடபெற்று வரும் வேளையில், இன்று காலை 5 மணிக்கே தன் கணவர் சல்லே டாலானுடன்  வாக்களிக்கச் சென்ற 100 வயது நிரம்பிய மூதாட்டி ஜெனாப் ஜாமான், இது வரை நடந்த 14 பொதுத் தேர்தலிலும் தவறாமல் வாக்களித்ததாகவும்,  இந்த இடைத்தேர்தலோடு 15 வது முறையாக வாக்களிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது  என்பதை மக்கள் உணர்ந்து தங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்தார். 

100 வயது நிரம்பிய நான்  இன்னும் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளேன். காரணம் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது. ஆகையால் இவ்வட்டார மக்கள் இன்று அவர்களது கடமையைச் சரியாகச் செய்யவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்!

0 Comments

leave a reply

Recent News