loader
புதிய வடிவத்தில் அஸ்ட்ரோ அல்ட்ரா பாக்ஸ்!  இனி எதையும் மிஸ் பண்ண முடியாது...

புதிய வடிவத்தில் அஸ்ட்ரோ அல்ட்ரா பாக்ஸ்! இனி எதையும் மிஸ் பண்ண முடியாது...

கோலாலம்பூர்  நவம்பர் - 13

தற்போது பல மாற்றங்களோடு அஸ்ட்ரோ வெளியிட்டுள்ள 'அல்ட்ரா பாக்ஸ்' "வயிலாக சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம் என அஸ்ட்ரோ தலைமைச் செயல்முறை அதிகாரி ஹென்ட்ரி டான் தெரிவித்தார்.

சன்வே பிரமிட் பேரங்காடியில் பொதுமக்களுக்கு மத்தியில் அஸ்ட்ரோ நிறுவனம் புதிய  அல்ட்ரா பாக்ஸை அறிமுகப்படுத்தியது. சில விளகங்களோடு ஹென்ட்ரி டான் இதனை அறிமுகம் செய்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்  சுமார் அரை மில்லியனுக்கு அதிகமான வீடுகளில்  4k தொலைக்காட்சிகள் உள்ளன. அதில் 70% விழுக்காட்டினர்  அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள். இந்த அல்ட்ரா பாக்ஸின் வெளியீடு தற்போது வளர்ச்சி கண்டு வரும் 4k uhd தேவையைப் பூர்த்தி செய்ய சரியான தருணமாகும் என ஹென்ட்ரி டான் குறிப்பிட்டார்.

அல்ட்ரா பாக்ஸின் சிறப்பு என்ன? 

4k uhd, கிளவுட்  ரெக்கார்டிங் (cloud recording), play from start,  மற்றும் புதிய இடைமுகம் கொண்டு பெரிய திரையில் பொழுதுபோக்கை மேம்படுத்துகின்றது.

Astro cloud recording:

புதிய அல்ட்ரா பாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோ கோ-வில் கிடைக்கும். இதன் வழி வாடிக்கையாளர்கள்  அல்ட்ரா பாக்ஸ் அல்லது அஸ்ட்ரோ கோ-வில் ஒரே நேரத்தில் பல நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து அதனை கிளவுட் சேமிப்புக் கிடங்கில் வைத்து எப்பொழுது, எங்கிருந்தாலும், எந்தத் திரையில் வேண்டும்மென்றாலும் கண்டு களிக்கலாம் . வாடிக்கையாளர்கள் 200 மணிநேர எச்டி பதிவு இலவசமாகவும், மாதம் ரிம 15 செலுத்தி 1500 மணிநேர வரை பதிவு செய்யலாம்.

Play from start:  நடுவில் இடைநிறுத்தம் செய்த ஒரு நிகழ்ச்சியை. அல்லது நீங்கள்  மிஸ் செய்து பாதியில் பார்க்க வாய்ப்பு கிடைத்த ஒரு நிகழ்ச்சியைத் தொடக்கத்தில் இருந்து காண, restart பட்டனை கிளிக் செய்யலாம்.  இனி எதையும் மிஸ் பண்ண முடியாது.

New home screen: எளிதில் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது. store-யில்   உள்ள நிகழ்ச்சிகளை தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் எந்தவொரு கட்டணமின்றி கண்டு களிக்கலாம்.

Discover and stream vod:  அல்ட்ரா பாக்ஸ் இணயத்துடன் இணைந்து 50,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஆன் டிமாண்ட் அல்லது ஆஸ்ட்ரோ கோ-வில் கண்டு மகிழலாம்.

Search: தொலைகாட்சி தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகள் நிகழ்ச்சி, நேரடி உள்ளடக்கம் மற்றும் உங்கள் பதிவுகளின் உள்ளடக்கங்களைக் கண்டுபிடிப்பதை மிகவும் எளிதாக்குகிறது.

Multi screen and stop here ,continue there:

நீங்கள் ஒரு  திரையில் இடைநிறுத்தம் செய்த நிகழ்ச்சியை மற்றொரு திரையில் கண்டு களிக்கலாம்.

இப்படி புதிய மாற்றங்களுடன் வெளிவந்துள்ள அல்ட்ரா பாக்ஸை ரிம 100-க்கும் மேல் கட்டண சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம்.  100 வெள்ளிக்குக் கீழ் மாதாந்திர சந்தா செலுத்தும் வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தி இதனை மேம்படுத்திக் கொள்ளலாம் .

மேல் விவரங்களுக்கு www.astro.com.my/ultra என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

இதனிடையே அஸ்ட்ரோ அல்ட்ரா பாக்ஸ் அறிமுக விழாவை  முன்னிட்டு 4k uhd தொலைகாட்சி, மற்றும் அல்ட்ரா பாக்ஸ் வெல்லும் ஒரே ஒரு அதிர்ஷ்ட சாலியை அஸ்ட்ரோ நிறுவனம்  குழுக்கள் முறையில் தேர்வு செய்தது. அந்தப் பரிசினை நமது 'தமிழ் லென்ஸ்' இணையத்தின் நிர்வாக இயக்குனர் வெற்றி விக்டர்  வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News